வணக்கம் நண்பர்களே......
*இணைய உதவியுடன் வலைத்தளத்தில், வலை எழுத்தில், சொந்த தளத்தில் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பர்களே..........கடந்த மாதம் டெக்ஸ் வில்லரின் டாப் 5மற்றும் நிறை குறைகள் ஆசிரியர் கேட்டு இருந்தார் , பல நண்பர்கள் பட்டாசு தோரணம் கட்டினார்கள் . நான் எப்போதும் கொஞ்சம் விரிவாகவே எழுதுவேன் என்பதால் தளத்தில் எழுதவில்லை ....(உதை வாங்கியது இன்னும் மறக்கவில்லை என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது )ஆனால் ஆசிரியருக்கு கடிதம் வாயிலாக அனுப்பி விட்டேன் . உங்களை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இது என்பதாலும், "தி லயன் 250" முதல் முறையாக 3முழு வண்ண டெக்ஸ் கதைகள் ஒரே இதழில் வரும் சமயம் என்பதாலும் இங்கே..............
*இணைய உதவியுடன் வலைத்தளத்தில், வலை எழுத்தில், சொந்த தளத்தில் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பர்களே..........கடந்த மாதம் டெக்ஸ் வில்லரின் டாப் 5மற்றும் நிறை குறைகள் ஆசிரியர் கேட்டு இருந்தார் , பல நண்பர்கள் பட்டாசு தோரணம் கட்டினார்கள் . நான் எப்போதும் கொஞ்சம் விரிவாகவே எழுதுவேன் என்பதால் தளத்தில் எழுதவில்லை ....(உதை வாங்கியது இன்னும் மறக்கவில்லை என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது )ஆனால் ஆசிரியருக்கு கடிதம் வாயிலாக அனுப்பி விட்டேன் . உங்களை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இது என்பதாலும், "தி லயன் 250" முதல் முறையாக 3முழு வண்ண டெக்ஸ் கதைகள் ஒரே இதழில் வரும் சமயம் என்பதாலும் இங்கே..............
டெக்ஸ் வில்லரின் டாப் 5
1.பழி வாங்கும் புயல்
2.கார்சனின் கடந்த காலம்
3.பவள சிலை மர்மம்
4.கழுகு வேட்டை
5.டிராகன் நகரம்
2.கார்சனின் கடந்த காலம்
3.பவள சிலை மர்மம்
4.கழுகு வேட்டை
5.டிராகன் நகரம்
------ இது என்னுடைய விருப்பம் மற்றும் ரசனையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்துள்ளேன் நண்பர்களே... காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா!!!(ப்ளாக்ல எழுதி இருந்தால் இந்த பழமொழிக்கும் மொத்தி இருப்பார்களோ ...?).இனி பெஸ்ட் ஆஃப் டெக்ஸ் வரிசையில் ஒவ்வொன்றாக பார்ப்போம்...........
1.பழி வாங்கும் புயல்:-
*நான் முதலில் படித்தேன் என்பதற்காக இதை டாப்பாக செலக்ட்செய்யவில்லை....ஒரு பழங்குடி இன மக்களின் சொற்ப வீரர்களை வைத்து கொண்டு ஒரு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ராணுவ படைப்பிரிவுகளை வெல்ல முடியுமா???. அதுவும் உயிர்பலி ஒன்று கூட இல்லாமல் டெக்ஸ் தன்னுடைய புத்திசாதுர்யத்தால் அதை செய்து காட்டி இருப்பார்.
*உல்லாச விளையாட்டின் உற்சாகத்தில் வெள்ளையர்களின் இரயில் உடன் போட்டி போடும் ஆறு இளம் சிறுவர்களை பணபலம் மிக்க பிறை நிலா பண்ணை அதிபர்கள் இருவர் சுட்டு தள்ளியது கண்டு கொதித்து எழுகிறார் டெக்ஸ். நீதி கேட்டு செல்லும் நவஜோஸ் தலைவரான தாமும் ஒரு வெள்ளையனே என்ற காரணத்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெபியன்ஸ் கோட்டை கர்னல் ஸ்டீவர்ட்டிடம் முறையிடுகிறார்.கர்னலின் அலட்சியம் காரணமாக வெகுண்டெலும் டெக்ஸ் அவருடன் வாக்குவாதம் செய்ய , டெக்ஸை சிறையில் அடைத்து விடுகிறார் கர்னல். காவலர்கள் உதவியுடன் கர்னலை துப்பாக்கி முனையில் பிணைக்கைதியாக்கி தப்பி செல்லும் டெக்ஸ் போர் முரசு கொட்டிவிடுகிறார்.
*இதற்கிடையில் ரயிலில் இருந்த கல்லாப் டெஸ்பாட்ச் நிருபர் ப்ளாயிட் உண்மை சம்பவத்தை எழுத ,அதனால் ஆத்திரமடையும் பண்ணை அதிபர் சாம் ஹோப், அடியாட்கள் மூலம் ப்ளாயிடை தாக்கி பத்திரிக்கை ஆபிஸை அடித்து நொறுக்கி சர்வநாசத்தை செய்கிறான்.
*கர்னலின் தலைமையில் வரும் ராணுவத்தை நவஜோஸ்கள் தங்களின் எல்லையில் திரும்ப இயலா தொலைவு இழுத்து செல்கின்றனர். சில நவஜோஸ்களுன் வரும் டெக்ஸ் டெபியன்ஸ் கோட்டையை எரித்து விடுகிறார். கால்லப் நகர செரீப்பை சந்திக்கும் டெக்ஸ் ஹாப்பை அடித்து நொறுக்குகிறார்., ப்ளாயிட் பற்றி அறிந்து அவரை செவ்விந்தியர்களின் புரட்சி நிருபராக்குகிறார்.
*இதற்கிடையில் ராணுவப்பிரிவுக்கு தண்ணீரும் உணவும்,குதிரைகளுக்கு புல்லும் கிடைக்காமல் செய்யும் நவஜோஸ் ,தங்கள் குடியிருப்புகளை எரித்த வண்ணம் உள்வாங்கி செல்கின்றனர். ஒரு கட்டத்தில் தாக்குப்பிடிக்க இயலா படைப்பிரிவு சரண்டைகிறது. கிட் வில்லரை கொல்ல முயலும் கர்னல் ஸ்டீவர்டை மொட்டை அடித்து சேணம் இல்லா குதிரையில் தப்பி செல்ல அனுமதிக்கிறார் டெக்ஸ்.
*நவஜோஸ்களுடன் சென்று பிறை நிலா பண்ணையை தாக்கி தீயிலிட்டு கொளுத்தி விடுகின்றார் வில்லர்.குற்றுயிரும் கொலையுயிருமாக வின்கேட் கோட்டை சென்றடையும் ஸ்டீவர்டின் கூப்பாடின் காரணமாக ,ஒரு படைப்பிரிவு அனுப்பி வைக்கப்படுகிறது. இவர்களும் பழைய பாணியில் சரண்டைய வைக்கப்படுகிறார்கள்.
*ராணுவ மேலிடம் டெக்ஸை பணிய வைக்க கார்சனை அனுப்புகிறது .சரண்டைய மறுக்கும் டெக்ஸ் தன் போர் திட்டத்தை தெளிவாக கார்சனுக்கு விளக்கி அவரை திருப்பி அனுப்புகிறார்.ப்ளாயிட் ,வாசிங்டன்ல உள்ள பிரஸ் நண்பர் மூலம் அரிசோனா யுத்தம்,கோட்டை அழிப்பு, படைப்பிரிவு சரணாகதி ,அரிசோனா கவர்னர் ப்ளிஸ்டரின் தவறான நடவடிக்கை -என அதிரடி செய்தி வெளியிட்டு பெரிய அளவில் தடாலடி செய்கிறார்.
*விழித்து கொண்ட ராணுவ மேலிடம் நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறது. கால்லப் நகர செரீப் உதவியுடன் , கார்சன் வாயிலாக இதை அறியும் டெக்ஸ் படைப்பிரிவுகளை விடுவித்து செரீப்பை சென்றடைகிறார். தன் நடவடிக்கை பற்றி அறிய கால்லப் நகர் செல்லும் ப்ளாயிடை ஹோப் சுட்டு விடுகிறான் . இதை அறியம் டெக்ஸ் இதற்காகவும் ஹோப்பை தண்டிக்க, கார்சனுடன் இணைந்து ,உதவி செரீப் ஆகிறார்கள்.இவற்றை அறியும் அடியாட்கள் தப்பி செல்கிறார்கள்.
*தண்டனை வழங்க உரிமையுள்ள நவஜோ தலைவர் பிக் எல்க் சகிதம் டெக்ஸ் குழு தப்பிச் செல்லும் ஹோப் மற்றும் அவன் நண்பனை துரத்தி செல்ல ,வஞ்சனையானவர்கள் அவர்கள் வழியே முடிவை தேடிக்கொள்கிறார்கள். நியூ கால்லப் டஸ்பாட்ச்சை உயிர் பெறச் செய்து ப்ளாயிட்டுக்கான நன்றிக்கடனை தீர்க்கிறார் டெக்ஸ்.
*டெக்ஸின் உயிர் நண்பர் கார்சனோடே மல்லுக்கட்டும் நிலையிலும் தன் நவஜோஸ்களை கைவிடாதவர் தான் டெக்ஸ்...நட்பையே தன் மக்களுக்காக இழக்க துணியும் நாயகன் உயர்ந்து நிற்கும் காட்சி அது.
*"முட்டையை உடைக்காமல் ஆம்லெட் பண்ண முடியுமா?",
*"உண்மையை எடுத்துரைத்தவனுக்கு இதுதான் கதி என்கிற அளவுக்கு தரம் இறங்கிப் போய்விட்ட இந்த சமுதாயத்திற்காக நான் பேப்பரையும், மசியையும் வீணடிக்கத் தயாரில்லை",
*"அவர், சாந்தமானவர்தான்- ஆனால் ரோசத்தில் யாருக்கும் சளைத்தவரில்லை",
*"!பணி புரியப் போவது எனக்கல்ல - சத்தியத்திற்கு"
,
,
*"கொல்லப்பட்ட நவஜோ இளைஞர்கள் பிக் எல்க்கின் பிரிவை சேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்குரிய தண்டனையை தீர்மானிக்கும் உரிமை அவருக்கே உரியது",
--- -போன்ற அமரத்துவம் வாய்ந்த டயலாக்குகள் மற்றும் அற்புதமான மொழி பெயர்ப்பும் இந்த கதையை வெகு சுலபமாக முதல் இடத்தில் அமர்த்தின.
--------சேலம் Tex விஜயராகவன்.
*எனது பெஸ்ட் ஆஃப் டெக்ஸ் வரிசையில் 2வது கதையை அருமை நண்பர் 'கிட்ஆர்ட்டின் கண்ணன்' அவரது நடையில் விமர்சிக்கிறார்...
2.கார்சனின் கடந்த காலம்:-
*கதைச்சுருக்கம் :தன்னை திர்த்துகட்ட நினைத்த நபரின் கதையை முடிக்கும் கார்சனுக்கு , அவன் பாக்கெட்டில் கிடைத்த துண்டு செய்தித்தாள் மூலம் பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. வில்லருக்கு விசயத்தை தெரிவிக்கச் சொல்லிவிட்டு., பழைய எதிரிகளை சந்திக்க கிளம்பிவிடுகிறார் கார்சன்.
*கார்சனுடன் சேர்ந்து கொள்ள செல்லும் வழியில் மகனுக்கு கார்சனின் கடந்த காலத்தை விவரிக்கிறார் வில்லர்.கடந்த காலம் நிகழ்காலம் ரெண்டும் கலந்துகட்டி விறுவிறுவென செல்லும் வில்லரின் கதை சொல்லும் பாணி.!அந்நாளைய மான்டனாவின் பன்னாக் நகரம். சுற்றிலும் தங்கம் விளைந்த சொர்க்கபூமி.
*தங்கத்தை சம்பாதிக்க இரண்டே வழிகள். நாள்முழுதும் பாடுபட்டு தோண்டி எடுப்பது ஒரு வழி, தோண்டியதை துப்பாக்கியை காட்டி ஆட்டயை போடுவது அடுத்த வழி. அப்படி ஆட்டை போடும் "அப்பாவி " கும்பலை வேரறுக்க ரேஞ்சர் கார்சன் சுயஅடையாளத்தை மறைத்து பன்னாக்கில் வசிக்கிறார்.
*மெல்ல மெல்ல முடிச்சவிழ்க்கப்படும் மர்மத்தில் பேரதிர்ச்சியாய் அப்பாவிகளின் தலைவன் , பன்னாக்கின் ஷெரீஃப்பும் தனது நெருங்கிய நண்பனுமான ரே க்ளம்மன்ஸ் என்பது கார்சனுக்கு தெரியவருகிறது.ஆனால் க்ளம்மன்ஸோ கார்சனுக்கும் அப்பாவி கும்பலுக்கும் மொத்தமாய் அல்வா வழங்கிவிட்டு மொத்த தங்கத்தோடு தப்பிவிடுகிறான்.
*க்ளம்மன்ஸ்., மீண்டும் பன்னாக் , வந்திருப்பதை அறிந்த அப்பாவிகள் அவரை பழிதீர்க்க ஒன்று கூடீயிருக்கும் வேளையில் கார்சனும் பன்னாக் வந்தடைகிறார். வில்லர் அப்பாவி கும்பலுக்குள் ஐக்கியமாகிவிட., கார்சன் க்ளம்மன்ஸுடன் சேர்கிறார். அப்பாவிகள் பிணைக்கைதியாக க்ளம்மன்ஸ் மற்றும் லினாவின் மகளான டோனாவை பிடித்துக்கொண்டு க்ளம்மன்ஸை வஞ்சம் தீர்க்க காத்திருக்கும் வேளையில்.,
*வில்லர் , கார்சன்., கிட்., க்ளம்மன்ஸ் குழு அப்பாவிகளை நிர்மூலமாக்கி டோனாவையும் தங்கத்தையும் மீட்டுவிடுகின்றனர்.காலங்காலமாக மாறத விதிமுறைப்படி வில்லன்கள் இறந்துவிட., ஹீரோ குழுவினர் கும்பலாக சிரித்தடி போட்டோ எடுத்து கதையை சுபமாக முடித்து வைக்கின்றனர்.
*இக்கதை கொண்டாடப்படும் காரணங்களில் சில. :- நண்பனுக்காக எதையும் செய்வேன் , என்று அடிக்கடி கூறும் ரே க்ளம்மன்ஸ்., நண்பர்களை காப்பாற்ற உயிரையே இழக்கும் இடம் ஒன்று போதும். கெட்டவனுக்குள்ளும் நட்பு இருக்கும் , சூழலுக்கேற்றார் போல் நட்பின் முக்கிய்த்துவம் மாறுபடும். நண்பனைக் காப்பாற்ற உயிரையே விலையாக கொடுத்த க்ளம்மன்ஸ்தான்., நண்பனால் தனக்கு ஆபத்து வரலாம் என்றெண்ணி., அந்த நண்பனையே காவு கொடுக்க துணிகிறான். நட்பின் பல பரிமாணங்களை மிக அழகாக சொல்லிய காவியம்
*பாடகி லினா மேல்., கார்சன் கொண்டிருந்த ஒரு தலைக் காதல், ரொம்பவும் ரம்மியமான ஒன்று. லினாவின் காதல் ரே க்ளம்மன்ஸ் மீதே எனத் தெரிந்தாலும்., காதலை வெளிக்காட்டாமலேயே தொடரும் கார்சன் , கண்களின் ஓரம் நீர்கோர்க்க வைக்கிறார்.
*நான் தனித்திருப்பது தெரிந்திருந்தால் என்னைத்தேடி வந்திருப்பீர்களா? என்ற லினாவின் கேள்விக்கு., மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன் என்ற கார்சனின் பதிலில் எத்தனை சஞ்சலங்கள். உன் குழந்தையின் தந்தையை காப்பாற்றவே என்னை பின்னந்தலையில் தாக்கியிருக்கிறாய் என்று புரிகிறது லினா என கார்சன் சொல்லும்போது காதலியின் மனம் வேறொருவனுக்குச் சொந்தம் என்ற கார்சனின் ஏமாற்றம் கலந்த ஆதங்கம் தெளிவாக தெரிகிறது.
*க்ளம்மன்ஸை தொடரவிடாமல் லினாவால் பின் மண்டையில் தாக்கப்பட்டது., இன்னும் வலிக்கிறது என்று சொல்லும் இடத்தில் கார்சனின் காதலின் வலி நமக்கும் புரிகிறது.மீண்டும் லினாவை பாடச்சொல்லி கூட சேர்ந்து பாடுவது ஒன்றே லினா மேல் கார்சனுக்கிருக்கும் காதலை ஆணித்தரமாக நிரூபிக்கிறது. முக்கோண காதலையும் மிக அழகாக சொல்லிய காவியம் இது.
* "தேசஞாணம் கல்வி ஈசன் பூசையெல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய் காசுமுன் செல்லாதடி., ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே குதம்பாய் காசுக்கு பின்னாலே " என்ற உடுமலை நாராயண கவியின் வைரவரிகளுக்கு இக்கதை மிக அற்புதமான உதாரணம். உதாரண புருசன் - ரே க்ளம்மன்ஸ்.
*தங்கத்திற்காக., உயிர் நண்பனையே கொல்லச் சொல்கிறான். அந்த தங்கத்தை தேட்டை போடுவதில் அவனுக்கு உதவிய அத்தனை நண்பர்களுக்கும் நாமம் சாத்துகிறான். காதலியை முழுமாத கர்ப்பினியாக தவிக்கவிட்டு ஓடுகிறான். இறுதியாக புதைத்த தங்கத்தை தோண்ட உதவியர்கள் இருவரையும் கூட இறுதிப் பயணம் அனுப்பிவிடுகிறான். பணத்தாசை பத்தாயிரம் செய்யும் என்று மிக அழகாக சொல்லிய காவியம்இது.
*பொன்னாசையால் நட்பு காதல் விசுவாசம் அனைத்துக்கும் துரோகமிழைக்கும் க்ளம்மன்ஸ்., புத்திர பாசத்திற்காக அந்த தங்கத்தையே தாரைவார்க்க தயாராகிறான். பெற்ற பிள்ளைகளுக்கு சொத்தை கொடுத்துவிட்டு தெருவில் நிற்க்கும் எத்தனையோ பெற்றோரை நாம் பார்த்திருப்போம் . ஆகவே பிள்ளை பாசத்திற்க்கு முன் பொன் பெரிதல்ல என்பதையும் மிக அழகாக சொன்ன காவியம் இது.
*பூன்., வாகோ டோலன்., ஒற்றைக்கண்ணன்., பில்லி க்ரைம்ஸ்., ரோஜர் லாவல்., செஸ்டர்., ஜானி லேம்., அக்கவுண்டன்ட் லேரி , டோப்ஸ் சகோதரர்கள் ஸ்கின்னர் மற்றும் பல கொடூர வில்லன்கள் அப்பாவிகள் என்ற பெயரில். சங்கேத பாஷைகள்., சிவப்பு ஸ்கார்ஃப்., கைகுலுக்கும் விதம்., ஈவிரக்கமற்ற கல்மனசு என காலத்திற்க்கும் மறக்க முடியாத பாத்திரப் படைப்புகள் இவர்கள். கூட இருந்து குழிறித்த க்ளம்மன்ஸின் கையாட்களின் கொலை முய்ற்ச்சியில் இருந்து கார்சன் தப்பும் சம்பவம் ..
*வில்லரும் கிட்டும்., வழியில் சந்திக்கும் இரு அப்பாவிகளிடம் மோதும் கட்டம்.,டோனாவை கிட்வில்லர் காப்பாற்றும் சம்பவம்., கையில் துப்பாக்கி இல்லாமல் அப்பாவிகளின் மத்தியில் வில்லர் கலக்கும் கட்டம்.,பாழடைந்த நகரத்தில் நடக்கும் பயங்கர க்ளைமாக்ஸ் மோதல் என பரபரப்பான ஆக்சன்களையும் பஞ்சமில்லாமல் மிக அழகாக சொல்லிய காவியம் இது
*காலத்தால் அழியாத காவியமாம் கார்சனின் கடந்த காலத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட்ட சங்கதிகள் சில. சொல்லப்பட வேண்டிய சமாச்சாரங்கள் பல. டெக்ஸ் வில்லரின் ஆகச்சிறந்த கதைவரிசையில் என்மனதில் என்றென்றும் நீங்கா முதலிடம் பிடித்திருக்கப்போவது இந்த காவியம்தான். நன்றிகள் பல.!!!
---------கிட் ஆர்டின் கண்ணன்.
*****-------------*****------------*****----------*****
***என்னுடைய சொந்த டைரிக்குறிப்பில் இருந்து இதுவரை லயன் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட டெக்ஸ் வில்லரின் கதைகள் பட்டியல் இதோ உங்களின் பார்வைக்கு நண்பர்களே***
*****-------------*****------------*****----------*****
***என்னுடைய சொந்த டைரிக்குறிப்பில் இருந்து இதுவரை லயன் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட டெக்ஸ் வில்லரின் கதைகள் பட்டியல் இதோ உங்களின் பார்வைக்கு நண்பர்களே***
*வலையுலக தமிழ் காமிக்ஸ் மூத்த பதிவர்களுக்கு முதல் வணக்கம். தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தும் சேந்தம்பட்டி காமிக்ஸ் குழு நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் .
*என்னுடைய எழுத்துக்களுக்கு முதன் முதலில் வலையேற்றம் அளித்த நண்பர் ஈரோடு ஸ்டாலினுக்கும்,, வலையுலகில் எனக்கான கூடு அமைத்து தந்த அருமை நண்பர் மாயாவி சிவா அவர்களுக்கும் அந்த "நன்றி" என்ற மூன்றெழுத்தை காணிக்கை ஆக்குகிறேன்.
**********என்றும் மாறா நட்புடன்*********
சேலம் Tex விஜயராகவன்.
சொந்த ப்ளாக் ஆரம்பித்துள்ள சேலம் tex விஜயராகவன் அவர்களே...உங்களுக்கு எனது வாழ்த்துக்களும், வில்லரை பற்றிய இரண்டு கதைகளை சுவையாக உங்கள் பார்வையில் அலசிய, சேலம் tex & கிட் ஆர்ட்டின் கண்ணன் உங்கள் இருவருக்கும் எனது பாரட்டுக்கள் நண்பர்களே..!
ReplyDeleteஒரு முக்கியஸ்தரும் முதல் வாழ்த்தை சொல்றார், அதை பார்க்க...இங்கே'கிளிக்'
உங்கள் அன்புக்கும் நட்புக்கும் நானும் கிட்டும் ஒரு ஸ்பெசல் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம் சார் ...
Deleteமாயாவியின் வாழ்த்து நல்ல டைமிங்.இந்த விஷயத்தில் மாயாவியை யாரும் அசச்சுக்கமுடியாது.!!!
Deleteஉங்க அன்புக்கு நான் அடிமை மாயாத்மா.!
Deleteகாமிக்ஸ் தல வில்லரும்., சேந்தம்பட்டி தல மாயாத்மாவும் சொல்லிட்டா அப்பீலே கிடையாது. அப்படியே செய்கிறோம் நண்பரே.!
வணக்கம் நண்பரே.. படித்துவிட்டு வருகிறேன்....
ReplyDeleteஅருமை... நண்பரே...இதே போன்ற வைர வரிகளோடு அடுத்த பதிவினை எதிபார்த்து காத்திருக்கிறேன்...
Deleteப்ளாக்கை படித்தவுடன் அந்த புத்தகங்களை மீண்டும் படிக்க தோன்றுவது எனக்கு மட்டும் தானா...?
Deleteநன்றி சார் ....பழி வாங்கும் புயல் அகப்பட்டதா ? நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு ஆட்டத்திற்கு .....
Deleteப்ளாக்கை படித்தவுடன் அந்த புத்தகங்களை மீண்டும் படிக்க தோன்றுவது எனக்கு மட்டும் தானா...?
Deleteநன்றி சரவணன் சார்.
Deleteஅருமை டெக்ஸ் விஜய் அவர்களே ...தங்களுக்கும் ..ரவிகண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...அருமையான எழுத்து நடை ..
ReplyDeleteதொடருங்கள் ..
தொடர்கிறேன் ....:)
நன்றி தலீவரே ...நிச்சயமாக தொடருகிறோம் ....அடுத்த பதிவில் டிராகன் நகரம் நீங்கள் தான் எழுதனும் ..
Deleteதேங்ஸ் தல!
Deleteஉங்க கைவண்ணத்தில் ட்ராகன் நகரம் காண ஆவலாக இருக்கிறேன்.
வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteநன்றி நண்பரே!!
Delete+1
Deleteடெக்ஸ் !உங்களுக்கும் கண்ணனுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ....:)
ReplyDeleteவருகை புரிந்து வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்.....
ReplyDeleteடெக்ஸ் ! பழி வாங்கும் புயல் நான் படித்ததில்லை ..எனவே கதை விவரிப்பினை ஆர்வமுடன் படித்தேன் ......நல்ல எழுத்து நடை ...தொடருங்கள் ...பின்வருவோம் ......
Deleteநன்றி சார் ....அட டா ....நான் அதிகமுறை படித்தது இந்த புயல் தான் சார் ....
Delete//டெக்ஸ் ! பழி வாங்கும் புயல் நான் படித்ததில்லை ..எனவே கதை விவரிப்பினை ஆர்வமுடன் படித்தேன் //
Deleteஅப்போ நான் எழுதுனதை ஆர்வமில்லாம படிச்சிங்களா செனா அனா.!
(கடுப்போடு முறைக்கும் படங்கள் மூன்று. ) (நன்றி மாயாத்மா)
விஜய், கண்ணன், சூப்பர்.ஆமா, கா.க.கா.ல, அந்த கவிதையை விட்டுட்டீங்களே, கண்ணன்.
ReplyDeleteநன்றி டாக்டர்....கண்ணன் வருவான்(ர்)...கவிதை சொல்லுவான்(ர்).....
Delete@ சுந்தர்.,
Deleteபெருசா எழுத வேண்டாம்னு., என் கைகளை கட்டி போட்டுட்டார் டெக்ஸ் மாமா.
அதனால்தான் கவிதை இடம்பெறவில்லை.
இப்போ இங்க வந்து பாட்டு படிச்சிகிட்டுஇருக்காப்புல. நற நற. ……
அஅந்த கவிதைய உங்களுக்காக பாட்டாவே பாடி காட்டிடுறேன் சுந்தர். (தனியாக. இத்தனை பேருகிட்ட மொத்து வாங்க ஒடம்புல தெம்பு இல்ல.)
மாம்ஸ் அருமை அசத்துங்கள் !மாமி நீங்களும் அசத்ததுறேள். தொடரட்டும் உங்கள் பதிவுகள் (கை தட்டல் படங்கள் )
ReplyDeleteதேங்ஸ் மாம்ஸ் ..
Deleteநெம்ப நன்னி சிங்கம்.!
Deleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகள் நண்பரே..
Delete+1
Deleteவாழ்த்துக்கள் டெக்ஸ் ஜி&கண்ணன் ஜி!சூப்பர்! பழிவாங்கும் புயல்,கார்ஸ்சனின் கடந்தகாலம் இரண்டு கதையின் விமர்சனமும் அருமையாகவும்,வித்தியாசமாகவும் இருந்தது நண்பர்களே.
ReplyDeleteநன்றி யுவா..
Deleteவாழ்த்துக்கள் டெக்ஸ் ஜி&கண்ணன் ஜி!சூப்பர்! பழிவாங்கும் புயல்,கார்ஸ்சனின் கடந்தகாலம் இரண்டு கதையின் விமர்சனமும் அருமையாகவும்,வித்தியாசமாகவும் இருந்தது நண்பர்களே.
ReplyDeleteமூன்று முறை வாழ்த்திய யுவாவுக்கு முன்னூறு நன்றிகள்.
Deleteமூன்று முறை வாழ்த்திய யுவாவுக்கு முன்னூறு நன்றிகள்.
Deleteவாழ்த்துக்கள் டெக்ஸ் ஜி&கண்ணன் ஜி!சூப்பர்! பழிவாங்கும் புயல்,கார்ஸ்சனின் கடந்தகாலம் இரண்டு கதையின் விமர்சனமும் அருமையாகவும்,வித்தியாசமாகவும் இருந்தது நண்பர்களே.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே.!உங்கள் இருவரது எழத்துக்களும் நன்றாக உள்ளது.கலக்குங்க.!நாளை மறுநாள் புதுக்கதை வரும்முன் இன்னொரு பதிவு போடுங்களேன்.நீங்கள் கொடுத்த டாப் 5,சரியான உண்மையான தேர்வு.!
Deleteகிட் ஆர்ட்டினை காணோமே என்று எடிட்டர் பிளாக்ல் தேடிக்கொண்டிருந்தோம்.கா.க.கா.விமர்சனம் அருமை.
டெக்ஸ் விஜயராகவன், எடிட்டர் சென்ற பதிவில் பிரிண்டிங் ரெடி என்றதுமே உங்கள் உற்சாகத்தை கண்டு கொஞ்சம் மிரண்டுதான் போனேன்.புத்தகம் வந்தவுடன் பக்கத்து வீட்டுகாரர்கள்மற்றும் கூரியர் பாய் நிலைமையை நினைத்தால்............?
வெல்கம் MV சார் ...தலை வரும் ஜீரத்தில் எழுத மனம் யோசிக்க மாட்டேங்குது சார் ...சனிக்கிழமை காலைல சீக்கிரமாக கடைக்கு வந்து கொரியர்க்காக வெயிட்டிங் .....
Deleteமாடஸ்டி வெங்கி சார்., ஷ்பெசல் தேங்ஸ். நாளைகழிச்சி மறுநாள் தலயோட அதகளம் ஆரம்பம். தயாரா இருங்க.
Deleteப்ளான் பண்ணி அடிங்க ஜி. வாழ்க!
ReplyDeleteஎல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் ஜி...தேங்யூ ஜி.
Delete+1 . நன்றி ஜானி சார்.
Deleteஅருமை நண்பர்களே அருமை .
ReplyDeleteநன்றி ரவி.!
Delete(உங்க கிட்ட இன்னும் பெருசா எதிர்பார்த்தேன்.)
அற்புதமான,ஆழமான விமர்சனம்.இருவருமே அவரவர்கள் பாணியில் விமர்சனம் செய்துள்ளீர்கள்.தொடரட்டும் உங்கள் பணி,வளரட்டும் உங்கள் காமிக்ஸ் நேசம்.
ReplyDeleteநன்றி நண்பரே....நிச்சயமாக தொடருவோம் ...
Deleteடெக்ஸ் ஜி ... அருமை ... நல்ல ஆரம்பம், உங்களது எழுத்து நடையும், நண்பர் கண்ணன் அவர்களது எழுத்து நடையும் ... தொடருங்கள் ... காத்திருக்கிறோம் .....
ReplyDeleteவாங்க ப்ளூ நன்றிகள் பல...
Deleteதேங்யூ ப்ளூ ஜி.!
Deleteப்ரதர் ஸ்டீவ் வா வை ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க.! (என்னை அவருக்கு தெரியுமான்னெல்லாம் யோசிக்காதிங்க)
வாழ்த்துக்கள் இரும்பு நகரின் இரும்பு மனிதரே !. பழிவாங்கும் புயல் நானும் படித்திருக்கிறேன். நல்லா விறு விறுன்னு போகும். டயலாக்கை சுட்டிக் காட்டி இருந்தது அருமை. ரசித்து படிப்பவர்களுக்கு மட்டும் அது நினைவில் இருக்கும். டெக்ஸ் கதைகளுக்காகவே எடிட்டர் மெனக்கிட்டு எழுதுகிறாரோ என்கிறமாதிரி இருக்கும். LMS இல் ரசித்த டயலாக்
ReplyDeleteஷெரிப்பை வெளுக்க அவர் ஆபீஸ் போகுமுன்
கார்சன் : மெனு சைவமா ? அசைவமா ?
டெக்ஸ் உம். கொத்துக்கறி
வண்ணத்தில் பெரிய சைசில் டெக்ஸ் கதைகள் வெளிவர வேண்டும் என்பதே என் விருப்பம்.
தனி தவில் வித்வான் பாவம் அந்த 2 பாக கதையை சுருக்கமாக சொல்லி முடிப்பதற்குள் மூச்சு வாங்கி இருக்கும் அல்லது கை ஓய்ந்து இருக்கும். தொடருங்கள் கண்ணன்.
வெல்கம் ராஜ் சார் ..டெக்ஸ் கதைகள் நிச்சயமாக ஆசிரியரின் செல்லக் குழந்தைகள் தான் சார் ..பெரிய சைஸ் ல அடுத்த ஆண்டு எதிர் பார்க்கலாம் சார்
Deleteஆமாம் ராஜ் சார். ரொம்ப சுருக்கமாதான் எழுதினேன். :-)
Deleteநமக்கு நிறைய எழுதி பழக்கமில்லை(வராது என்பது வேறு விஷயம்) ஆனா நானும் அப்பப்போ எட்டி பார்த்துவிடுவேன் ஜி....
ReplyDeleteவாழ்த்துக்கள் ...
தொடர்ந்து எழுதுங்கள்
வாங்க பாசா....அடிக்கடி வாருங்கள்
Deleteதொடருவோம் பாஷா ஜி.! தவறாமேல் தொடருங்கள்.!
Deleteதொடருவோம் பாஷா ஜி.! தவறாமேல் தொடருங்கள்.!
Deleteஇங்கே என்ன மாயாஜாலம் நடக்கிறது ...சேலம் டெக்ஸ் விஜயராகவன் தனி ப்ளாக் ..அதில் டெக்ஸ் கதைகள் ..
ReplyDeleteநான் உள்ளே வரலாமா
வாங்க வாங்க வெட்டுக்கிளி சார் ....விரிவாக உங்கள் கருத்தை சொல்லுங்களேன் ...
Deleteஇதுவரை வந்த டெக்ஸ் கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த கார்சனின் கடந்தகாலம் பற்றிய அலசல்
ReplyDeleteமிகவும் பிரமாதம்...உண்மையான ரசிகர்களின் கூட்டத்தில் இப்போதுதான் நானும் ஒரு அங்கம் ஆனது போல் ஒரு தோற்றம் ஒரு அன்பு இது உண்மைதானே இதில் கிட் ஆர்ட்டின் கண்ணனின் பங்களிப்புமா சூப்ப்ப்பர்
அனைத்து தமிழ் காமிக்ஸ் ரசிகர்களிடமும் நடுநிலையான மாறா நட்பே எங்கள் நோக்கம் ....
Deleteவெல்கம் வெட்டுக்கிளியாரே!
Deleteநீண்ட நாட்களுக்கு பிறகு., உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி.!
வாழ்த்துக்கள் நண்பர்களே டெக்ஸ் , கண்ணன் அருமையாக உள்ளது பழி வாங்கும் புயல். கார்ஸ் சனின் கடந்த காலம். படித்த கதை என்றலும் உங்ககளுடைய உரை நடை நன்றக உள்ளது அடுத்த பதிவு எப்போழுது,
ReplyDeleteநன்றி நண்பரே...வாரம் ஒரு பதிவு ...வார மத்தியில் என்பதே தற்போதைய ப்ளான்...
Delete+1 மாம்ஸ்.
Deleteஉங்களுடைய வசன நடை மிகவும் அருமையாக உள்ளது தோழரே
ReplyDeleteஇது போல் பல டெக்ஸ் கண்டு கொண்டாடிட உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
வாழ்த்துக்கள்
நன்றி ஜெய தோழரே ....நிச்சயமாக உங்கள் ஆவல் இங்கே பூர்த்தி ஆகும் ...
Deleteஅட்டகாசம் டெக்ஸ். பிரமாதமான விளக்கம். மறுபதிவு எப்போ?
ReplyDeleteதேங்ஸ் இளா....நெக்ஸ்ட் வீக்...
Deleteசொந்த ப்ளாக் ஆரம்பித்துள்ள சேலம் tex விஜயராகவன் அவர்களே...உங்களுக்கு எனது வாழ்த்துக்களும், வில்லரை பற்றிய இரண்டு கதைகளை சுவையாக உங்கள் பார்வையில் அலசிய, சேலம் tex & கிட் ஆர்ட்டின் கண்ணன் உங்கள் இருவருக்கும் எனது பாரட்டுக்கள் நண்பர்களே..!
ReplyDeleteதேங்ஸ் பீனிக்ஸ்.
Deleteஹிஹிஹி! காப்பி பேஸ்ட்., இங்கே வரை வந்துவிட்டதே.!!
பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே.!
ReplyDeleteஅற்புதமான ஆழமான விமர்சனம்
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி,..
நன்றி குமார் சார். உங்க புரொஃபைல் சூப்பரா இருக்கு.
Deleteகார்த்திக் சோமலிங்கா.!லிங்க் கொடுத்த ஈரோடு விஜயை காணோம்.?
Delete@ M.V
Deleteவிசாரிப்புகளுக்கு நன்றி சார்! சற்றே அதிக வேலைப்பளுவின் காரணமாக கமெண்ட் போடுவதற்கான ஒரு சாவகாசமான நேரம் இந்த நள்ளிரவில்தான் அமைந்தது! அதான் கொஞ்சம் லேட்! ( மாடஸ்டியின் இரசிகர்கள் எல்லாருமே ரொம்பப் பாசக்காரங்களா இருக்காங்களே....)
Super Ji! Kalakkunga!!
ReplyDeleteநன்றி பொடியன் ஜி...
Deleteஒரு அட்டகாசமான தொடக்கத்திற்கு வாழ்த்துகள் நண்பர்களே!
ReplyDeleteடெக்ஸின் தரவரிசை(!) பட்டியலில் நானும் முதலிடம் கொடுத்திருப்பது 'பழிவாங்கும் புயல்' தான் என்பதால் டெக்ஸ் விஜயராகவனின் கதை சொல்லும் பாணியோடு லயித்திடுவது சுலபமாயிருந்தது! தங்குதடையின்றி உங்களது ஒவ்வொரு எழுத்தின் பின்னாலேயயும் நானும் பயணித்திடுவது மிகச் சுலபமாய் இருக்கிறது நண்பரே! உங்கள் கதை சொல்லும் திறன் பதிவுக்குப் பதிவு மெருகேறிவருதையும் கண்கூடாகக் காணமுடிகிறது. ஆத்ம திருப்தியோடு செய்யும் எதுவும் அழகாய், இயல்பாய் வெளிப்படும் என்பதற்கு உங்களின் இப்பதிவே சாட்சி!
@ கிட் ஆர்ட்டின்
ஒரு வன்மேற்குக் கதைக்கு உடுமலைக் கவிஞரின் வைர வரிகளை மேற்கோள் காட்டியிருப்பது அழகு! நன்றாகத்தான் கதை சொல்லியிருக்கிறீர்கள் எனினும், எனக்கு சற்றே வித்தியாசமாய்த் தெரியும் இரண்டு விசயங்கள்:
* மிகச் சமீபத்தில்தான் நாம் அனைவருமே வண்ண மறுபதிப்பில் படித்து ரசித்த 'கா.க.கா'வை skip செய்துவிட்டு, 3ம் இடத்திலிருக்கும் 'பவளச் சிலை'யை கையில் எடுத்திருந்தால் இன்னும் படு அசத்தலாக இருந்திருக்கும் என்பது என் கருத்து!
* உங்களுக்கு யாரோ ஒரு கட்டம் போட்டுக்கொடுத்து (டெக்ஸ் விஜய்?) 'இதற்குள் எழுதலேன்னா தவிலை வரப்புக்குள் உருட்டி விட்டுடுவேனாக்கும்' என்று மிரட்டியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறதே! ;) அடுத்த பதிவில் உங்களது 'வழக்கமான பாணியில்' போட்டுத் தாக்குவீர்களென எதிர்பார்க்கிறேன்! ( அதாவது, அடிக்கிற அடியில் தவில் கிழிந்து தொங்கவேண்டும்) :))
ஈ வி அவர்களே.,
Deleteபெஸ்ட் ஆஃப் டெக்ஸ் எனும்போது நான் முதலிடத்தில் வைத்திருப்பது கா.க.காலத்தைத்தான். எனவே அதைப்பற்றி எழுதவேண்டிய அதிர்ஷ்ட நிலைக்கு ஆளாக்கிக்கொண்டேன்.
டெக்ஸ் கதைகளின் சிறப்புகளை பற்றி எழுதும் வேளையில் ஒரு சிறு நைய்யாண்டிக்குகூட அனுமதியில்லை என்று கட்டளை போட்டுவிட்டார் டெக்ஸ் மாமா.!
இருந்தாலும் ப.சி.ம விற்கு பர்மிஷன் கேட்டு இருக்கிறேன்.
பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டால் பட்டாசு தோரணம் கட்டிவிடலாம்.
வாங்க விஜய் ....உங்கள் உற்சாக பாராட்டுக்கு நன்றிகள் பல......
Delete///* உங்களுக்கு யாரோ ஒரு கட்டம் போட்டுக்கொடுத்து (டெக்ஸ் விஜய்?) /////.. அவருக்கு கட்டமும் போடல ...வட்டமும் போடல ...ஹி...ஹி... ஆர்டின் மாமாவை கா.க.கா. எழுத சொல்லிட்டு மற்ற 4ம் நான் எழுதிட்டேன்...இரவு 1மணிக்கு அவர் எழுதிய "சின்ன " விமர்சனம் வந்தது ......என்னுடைய 4ம் சேர்ந்ததை வுட பெரிதாக .....டர்ர் ஆக போன நான் 4ம் அழித்து விட்டு பழி வாங்கும் புயலை மட்டும் மீண்டும் கொஞ்சம் விரிவாக எழுதினேன் ...ஹி...ஹி...
அடுத்த பதிவில் நான் ப.சி.மாவை..எனது ரெகுலர் பாணியில் + மாமா அவருடைய நையாண்டி பாணியில் ...முதல் முறையாக ஒரே கதைக்கு இரு விமர்சனங்கள் -ஒரே பதிவில். .....எப்பூடி ..(கண் சிமிட்டும் படங்கள் பத்து -நன்றி மாயாவி சார் )
///அவருக்கு கட்டமும் போடல ...வட்டமும் போடல /// ----> இது டெக்ஸ் விஜயின் பதில்!
Delete//டெக்ஸ் கதைகளின் சிறப்புகளை பற்றி எழுதும் வேளையில் ஒரு சிறு நைய்யாண்டிக்குகூட அனுமதியில்லை என்று கட்டளை போட்டுவிட்டார் டெக்ஸ் மாமா.! /// ------> இது கிட்ஆர்ட்டினின் பதில்!!
பாருங்க மக்களே! ஆரம்பமே பித்தலாட்டமா இருக்கே! :D
ஹாஹாஹா!
Deleteஈ வி., இன்னிக்கு பொழுது ஈசியா போயிடும் போலிருக்கே.! :-)
அருமை நண்பரே!
ReplyDeleteஎன் சார்பாகவும் சேலம் டெக்ஸ் சார்பாகவும் நன்றிகள் பரணி.
Deleteவாருங்கள் பரணீ நன்றி ...உங்களிடம் இருந்து இன்னும் கொஞ்சம் நிறைய எதிர் பார்க்கிறேன் நண்பரே..
Deleteஉங்கள் புதிய ப்ளாக்குக்கு வாழ்த்துக்கள் சார் :)
ReplyDeleteஉங்கள் மற்றும் கிட் ஆர்ட்டின் கண்ணன் விமர்சனங்களும் அருமை :)
உங்களுக்குப் பிடித்த மற்றைய 3 கதைகளும் நான் படித்ததில்லை.எனவே அவை குறித்த விமர்சனங்களை படிக்க ஆவலுடன் காத்துள்ளேன் :)
நலமா அபிஷேக். பேசி நாளாச்சு. பாராட்டுக்கு நன்றி.!:)
DeletePalivangum pavai matrum pali van gum Puyal confusion nanbargaley explain please
ReplyDeleteநண்பரின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்க மாமா டெக்ஸ் விஜயராகவன் அவர்களை அழைத்துவிட்டு அமர்கிறேன்.!
Deleteவாங்க ஶ்ரீதர் ....மேலே நீங்கள் பார்த்தது பழி வாங்கும் புயல் ...பெரிய சைஸ்ல ...1991நவம்பர் தீபாவளி மலரில் வந்து புயல் வீசி சென்ற கதை இது .....
Deleteபலி வாங்கும் பாவை --1987பொங்கல் மலராக வந்த இதே கான்செப்ட் தான் ...ஆனால் பாக்கெட் சைஸ்ல வந்தது .....
இதிலும் ஒரு கிறுக்கு கர்னல் ,டெக்ஸின் ஒரு கிராமத்தை விடியலில் தாக்கி அழித்து விடுவான்...கொல்லப்பட்ட கிராம தலைவனின் மனைவி தப்பி வந்து தலையிடும் சொல்ல ...பிறகென்ன அந்த படைப்பிரிவுக்கும் அதோ கதிதான் ....ஆனால் க்ளைமாக்ஸ் அதில் வித்தியாசமாக இருக்கும் ....காமிக்ஸ் கிளாசிக்ஸ் ல வந்ததே ...கொஞ்சம் எளிதாக கிடைக்கும் இது ...
புது பிளாக் ஆரம்பித்துள்ளதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சேலம் விஜய் சார்.
ReplyDeleteகிட் ஆர்டின் & ஸ்ரீதர்;
அடுத்த விமர்சனத்திற்கு பழிவாங்கும் பாவையை ரெகமன்ட் செய்ய இப்படியும் வழி இருக்கா? சூப்பர்
பழிவாங்கும் பாவை+1
வாங்க அமர்நாத் ...சேலத்தில் எங்கே உள்ளீர்கள் நீங்கள் ?? சிட்டியில் என்றால் 4ரோடு ,லைட் ஹவுஸ் காம்ப்ளெக்ஸ் ல உள்ள சேலம் ஸ்டீல் கடைக்கு வாருங்களேன் .....இல்லைனா கிவ் மீ எ மெசேஜ் இன் 9629298300...பழி வாங்கும் பாவை சற்றே மெதுவாக பார்க்கலாம்...
Deleteஅழைப்புக்கு நன்றி.
Deleteவெளியூரில் அலையும் சேல்ஸ்ரெப் வேலை என்பதால் நான் பின்னூட்டங்களிடுவது பெரும்பாலும் வெளியூர்களிருந்து தான்.;-(
டெக்ஸும் கார்சனும் போல சேலம் விஜய் மற்றும் கிட் ஆர்டின் கண்ணன் கூட்டணி மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteடெக்ஸ் கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த இந்தப் 'பழிவாங்கும் புயல்' வண்ணத்தில் மறுபதிப்பாக வரவேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை! நண்பர்களின் ஒத்துழைப்போடும், தலீவரின் சீரிய தலைமையிலும் களமிறங்கினால் வெற்றி நிச்சயம்!
ReplyDelete( இக்கதை வண்ணத்தில் உள்ளதா என யாராவது தெளிவுபடுத்துங்களேன்?)
இத்தாலி மொழி தெரிந்த சென்னை டெக்ஸ் ,, ஶ்ரீராம் லக்ஸ்மனன்னுக்குத் தெரியும் ன்னு நினைக்கிறேன் விஜய் ........அவரை கேட்போம்...
DeleteTitle of this BLOG is good!
ReplyDeleteஉள்ளேன் ஐயா & ஐயா... (அதீத வேலைபளு... மறுபடியும் வருகிறேன்)
ReplyDeleteவேலைப்பளு வை இன்னும் இறக்கி வைக்கவில்லையா SVV சார்.! (ஒரு கண்ணை மட்டும் சிமிட்டும் படங்கள் மூன்று )
Deleteஇங்கே'கிளிக்'
ReplyDeleteஎல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் சார் ஆனால் ...100ல் பாதி நாங்கள் போட்டதே....மக்கள் அடிக்க வந்துட போறாங்க ....
ReplyDeleteஅருமை, தமிழில் டெக்ஸ்க்கு ஒரு blogspot, தொடருங்கள்
ReplyDeleteஉலகில் முதல் டெக்ஸ் வில்லருக்கான தமிழ் வலைத்தளம் எங்கள் அன்பு நண்பர்கள் மூலம் வந்தது எங்கள் அனைவருடைய பெருமை .இது சொந்தமான கருத்து கிட் ஆர்டின் .
ReplyDeleteதானே எழுதிய தங்கத் தலைவர் ராஜா வாழ்க வாழ்க.!!!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவின்ச், பீனிக்ஸ் @இருவர் சார்பாகவும் நன்றிகள் நண்பர்களே....ஆனால் உண்மையில் தமிழில் டெக்ஸ்க்கு மட்டுமே என நிறைய ப்ளாக்குகள் நமது நண்பர்கள் தொடர்ந்து வெற்றி கரமாக நடத்தி வருகிறார்கள் ...
DeleteReplyDelete
கலக்குங்கள் சார் ! 'தல' யைப் பற்றி மட்டுமே என்றில்லாது மற்ற நாயகர்களுக்கும் இங்கே இடம் தந்தால் இன்னும் சூப்பராக இருக்கும் !
ReplyDeleteசார் சார் வாங்க சார் ...நானும் கிட் மாமாவும் ,, ஒட்டுமொத்த சேந்தம்பட்டி காமிக்ஸ் குழுவே உங்களை வரவேற்கிறோம் சார் ......ஆயிரம் நன்றிகள் அனைவரின் சார்பாகவும் சார் ....உங்கள் எண்ணம்போலவே அனைத்து நாயகர்கள் பற்றியும் நிச்சயமாக எழுதுகிறோம் சார் ....
Deleteநன்றிகள் பல எடிட்டர் சார்.!
Deleteதங்கள் வருகையால் சேந்தம்பட்டி காமிக்ஸ் குழுவே பெருமையடைகிறது.!!!
Good Morning Friends I Got The lion 250..
ReplyDeleteகர்ர்ர்……………ர்ர்ர்!!!
Deleteஎனக்கு இன்னும் டீ வரல குமார் சார்.!
Thalai ah paaka kalaila 7lu manikey pooi vangitu vanthutan Kannan sir..
ReplyDeleteநண்பர்களே, தங்களின் புதிய வலைதளத்திற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள் !
ReplyDeleteஎழுத்துலகில் வெற்றிக்கொடி நாட்டிய சுபா போலவும்,
இசையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய விஸ்வநாதன் ராமமூர்த்தி போலவும்,
தமிழ் காமிக்ஸ் உலகில் வெற்றிக்கொடி நாட்டிய லாரன்ஸ் டேவிட் போலவும்,
தமிழ் காமிக்ஸ் வலைதளத்தின் இரட்டையர்களாக வெற்றிக்கொடி நாட்ட வாழ்த்துகிறேன் !!
டெக்ஸ் வில்லர் வாழ்க ! டெக்ஸ் வில்லர் புகழ் ஓங்குக !
இருவரின் நன்றிகள் Mr.m.m....
Deleteநீங்கள் இனிமேல் என்னதான் தலை புகழ் பாடினாலும் உங்களுக்கு திங்கள் கிழமை தான் -தி லயன்250 கிடைக்கும் .....
தங்களின் வருகையால் அகமகிழ்ந்தோம் நண்பர் திரு மரமண்டை அவர்களே.!
Deleteதாமதமான பதிலுக்கு மன்னியுங்கள்.
அருமையான கூட்டணி பதிவு நண்பர்களே !
ReplyDeleteஅப்படியே டெக்ஸ் கதைகள் ஒவ்வொன்றையும் தொடர் போல விளக்கத்துடன் எழுதி அசத்துங்களேன்.....
உங்கள் இந்த முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
வாங்கி ஸ்டாலின் ஜி...உங்கள் வாழ்த்துக்களை இருவரும் நன்றி சொல்லி ஏற்கிறோம்..
Deleteவணக்கம் டெக்ஸ்
ReplyDeleteடெக்ஸ் ஸ்பைடர் கதைகள் பற்றி நான் எழுதலாமா
ReplyDeleteநிச்சயமாக ஸ்பைடர்....அதுதானே நம் ப்ளான்....ஈரோடு விழாவிற்கு பிறகு....
ReplyDeleteTest
DeleteI am waiting Tex
ReplyDelete