Tuesday, July 28, 2015

சேலம் to ஈரோடு 2013

வணக்கம் நண்பர்களே...
         
            *ஈரோடு புத்தக திருவிழா 2015 கூப்பிடு தூரத்தில் வந்து விட்டது- என்ற தகவல் கிடைத்தவுடன் என் மனம் முந்தைய ஈரோடு திருவிழாக்களை சற்றே  அசைபோட்டது. ஈரோடு ஃபெண்டாஸ்டிக் நால்வர்கள் ஸ்டாலின் , புனிதசாத்தான், ஆடிட்டர் ராஜா , ஈரோடு விஜய் இவர்களை நான் சந்தித்தது 2012 டிசம்பரில் ஒரு நண்பர்கள் சந்திப்பில் தான் . அந்த முதல் சந்திப்பில் தான் தலீவர் பரணிதரனையும் முதல் முறை பார்த பேசி , ஒன்றாக சாப்பிட்டு, பழங்கதை பேசி மகிழ்ந்தோம்.
            * எங்கள் பேச்சு இரு மாதங்கள் முந்தைய ஈரோடு புத்தக விழா பற்றி திரும்பியது. 2012ஈரோடு புத்தக விழாவில் நமது காமிக்ஸ்கள் மற்ற இரு ஸ்டால்களில் வைத்து நல்ல முறையில் வரவேற்பை பெற்றது பற்றியும் ; அந்த விழாவில் தான் அதுவரை லயன் வலைத்தளத்தில் வெறும் பெயர்களாக மட்டுமே அறிந்து வந்த  நண்பர்கள் அனைவரும் நேரில் சந்தித்தது எனவும் - நண்பர் ஸ்டாலின் சொன்னார். மேலும் பல நண்பர்கள் உற்சாக ஆட்டத்தில் பங்கு பெற்றதையும் ஆர்வம் பொங்க விவரித்தார். ஆகா வடை போச்சே ! என்ற எண்ணம் எழுந்தது - காரணம் : ஆசிரியர் எப்போதும் குறிப்பிடுவது போல ஒரு மழைநாள் பகலில் கம்பேக் ஸ்பெசலில் இருந்து  அதுவரை வந்த காமிக்ஸ்களை சற்றே மீண்டும் புரட்டிய போது லயன் நியூ லுக் ஸ்பெசலில் இருந்த நண்பர் புனித சாத்தான் நெம்பரை தொடர்பு கொண்டதன் பலனே இந்த நண்பர்கள் சந்திப்பின் அழைப்பு. அந்த புரட்டலை இரு மாதம் முன்பே செய்திருந்தால் நானும் அந்த விழாவில் பங்கு பெற்று இருக்கலாமோ ???!!!.

          *2013ஈரோடு விழா நெருங்கி விட்டது ஆசிரியர் 2ம் ஞாயிறு வருகிறார் ,நீங்கள் முதல் ஞாயிறும் வர வேணும் என்ற நண்பர் ஸ்டாலினின் அன்பான அழைப்புக்கு  ஏற்ப, நான் என் மனைவி மற்றும் மகனுடன் சென்று இருந்தேன் . காலை 11.30க்கு ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள பிருந்தாவன் ஓட்டலில் காலை டிபன் இட்லியும் மசால் தோசையும் சாப்பிட்டு விட்டு ,நண்பர் ஸ்டாலினுக்கு போன் அடித்தேன் . பிருந்தாவன் ஓட்டல் வாசலில் உள்ளேன் என சொல்ல ,அவர் அப்படியே லெஃப்ட்ல பாருங்கள் 100மீட்டர் தூரத்தில் ஈரோடு புத்தக விழா நுழைவாயில் உங்களை வரவேற்கும் என்றார். 

            *சேலத்தில் புத்தக விழா என்றால் ஒரு கல்யாண மண்டபத்தில் நடக்கும், ஒரு 50கடைகள் அதிலும் அதிகம் கோலப்புத்தகமும் ஜோசிய புத்தகமும் குவிந்து கிடக்கும் . இங்கே மட்டும் என்ன பெருசா இருக்க போவுது ??? என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தேன். ஒரு கணம் நான் தலை சுற்றி போனேன். அடேயப்பா .....200கடைகளுக்கு மேல் இரு பிரதான வரிசைகளில் ஒரு அரைக்கிலோமீட்டருக்கும் நேர்த்தியான ஒழுங்குடன் அணிவகுத்து என்னை முறைத்தன. இது உண்மையிலேயே புத்தக கடல் என்ற ஆச்சரியத்துடன் நமது ஸ்டாலை தட்டுத்தடுமாறி அடைந்தேன்.  

             *முதலில் என்னை வரவேற்றது திருப்பூர் ப்ளூபெர்ரி தான் ....அவருடன் நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.பிறகு சாத்தான் ஜி,ஆடிட்டர் ராஜா மற்றும் நிறைய நண்பர்கள் ஒவ்வொரு வராக சேரத்துடங்கினர். பிறகு விஜய் , ஒரு மணிநேரம் கழித்து சும்மா டிப்டாப்பாக ரெடியாகி தனது மகன் மனோஜ் உடன் ஸ்டாலின் ஒரு வழியாக வந்த சேர்ந்தார். 5ம் வகுப்பு படித்து வந்த என் பையனும், அதே ஸ்டாண்டர்ட் படித்து வந்த மனோஜும் உடனடியாக செட்டு சேர்ந்து கொண்டனர். இரு பொடியன்களையும் என் வீட்டுக்காரியையும் சுற்றி பார்க்க அனுப்பி விட்டு, நாங்கள் அரட்டை கச்சேரியை தொடங்கினோம் .

           *2012ல் இறுதி நொடியில் நமக்கு எப்படி ஸ்டால் கிடைக்காமல் போனது ,இந்த ஆண்டு அப்படி நடக்காமல், தனிஸ்டால் கிடைக்க நண்பர் ஸ்டாலின் செய்த பகீரத முயற்சிகள், வெள்ளிக்கிழமை தொடக்கம் முதலே கிடைத்து வந்த வரவேற்பு மற்றும் விற்பனை, நண்பர்களின் உற்சாக பங்கெடுப்பு மற்றும் ஒத்துழைப்பு என நேரம் ஓடியதே தெரியவில்லை. 3மணிக்கு சரி சாப்பிட போலாம் என பொடுசுகளை தேடி போனேன். பசங்கல எப்ப சார் வீட்டுக்கு கூட்டி போவீர்கள் என்றே ஒரு கடைக்காரர் கேட்டேவிட்டார். இருவரும் போட்ட ஆட்டம் அப்படி ,அவர்கள் புகுந்து புரட்டாத ஒரு கடையும் இல்லை என தெரிந்து கொண்டேன்.

             *மாலை 5மணி வரை அனைத்து ஸ்டால்களையும் சுற்றி வந்த என் வீட்டுக்காரி சொன்னது,"என்னங்க நம்ம- (கவனிக்க நம்ம) காமிக்ஸ் ஸ்டாலில் மட்டும் தாங்க கூட்டம் அதிகம் , எல்லாரும் வாங்கிட்டும் போறாங்க. மத்த கடைகளில் கூட்டம் போகுது ஆனால் எதாவது ஒரு கடையில் தான் விற்க்குது". ஈரோடு விழாவில் காமிக்ஸ்க்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கிறது எனபுரிந்த கணம் அதுவே. நண்பர் ஸ்டாலின் வீட்டிற்கும் ஒரு மினி விசிட் அடித்து விட்டு சேலம் வந்தோம். நான் கிளம்பி வந்த பிறகு நிறைய நண்பர்கள் வந்துள்ளனர் என ஸ்டாலின் அவர்களின் ப்ளாக் மூலம் அறிந்து கொண்டேன். அடுத்த ஞாயிறு ஆசிரியர் வரும் நாள் காலையில் சீக்கிரம் வந்து விடுங்கள் என்ற ஸ்டாலின் சாரின் அழைப்பு காதில் ஒலித்து கொண்டே இருந்தது. அந்த ஞாயிறும் வந்தது.இந்த சமயத்தில் இந்த லயனின் 2வது இன்னிங்ஸில் நண்பர் கர்ணன்  மற்றும் ஓரிருவர் மட்டுமே அறிமுகம் ஆகியிருந்த காலம் அது , அவருக்கு ஏதோ முக்கிய வேலை ஞாயிறு காலை இருந்ததால் மதியம் வந்து விடுகிறேன் என்றார் , நான் மட்டும் காலை 8க்கு கிளம்பினேன்.

              *ஆசிரியரையும் அனேக நண்பர்களையும் சந்திக்கும் ஆர்வத்தில் புத்தக காட்சி நுழைவாயில் செல்லும் முன்னே திடீரென "டெக்ஸ் விஜய்ய்ய்....என்ற குரல் என் கவனத்தை திருப்பியது. யார்னு பார்த்தால் தலீவர் பரணீதரன் , தன் குட்டி மகன் நரேந்திரன் உடன் மரத்தடியில் இருந்தவர் வரவேற்றார். ஆர்வ மிகுதியால் 10.15க்கே வந்து விட்டதாகவும் இன்னும் அரை மணி நேரம் உள்ளது நம்மை அனுமதிக்க என்றார். அப்புறம் என்ன ...11மணி வரை நம் புராணம்தான்..ஒரு வழியாக உள்ளே நுழைந்தால் சாத்தான் ஜி, மற்றும் ஆடிட்டர் ராஜா இருவரும் உடனடியாக வந்தனர் . ஆசிரியரை ஸ்டாலின் அழைத்து வருவதாகவும் இப்போது வந்து விடுவார்கள் என்றும் சொன்னார்கள். அடுத்து விஜய் , மளமள என சில பல நண்பர்கள் வந்தார்கள், என்னென்னவோ பெயரில் ஒன்றும் காதில் ஏறள ..அந்த ஒரு முகத்தை தேடியே வழியை பார்த்து கொண்டே இருந்தேன்.  

              *11.30க்கு அந்த முகத்தின் சொந்தக்காரர், ஆசிரியர் வந்து சேர்ந்தார். ஒவ்வொரு நண்பர்கள் உடன் கை குலுக்கி நலம் விசாரத்தவாரே வந்த ஆசிரியர் என் கையையும் பிடித்து விஜயராகவன் நல்லா இருக்கீங்களா என்றாரே பார்க்கலாம் ....   ஒரே ஒரு முறை 11மாதங்கள் முன்பு பெங்களூரு காமிக்கானில் ஒரு 15நிமிடங்கள் மட்டுமே சந்தித்து இருந்த என் பெயரை மறக்க வில்லையே என நான் ஆச்சர்ய பட்டு போனேன் ...பிறகு தான் உரைத்தது ஆசிரியர் ஒவ்வொரு நண்பரின் பெயரை சொல்லித்தான் அழைத்தார், அவரையே பார்த்து கொண்டு இருந்த ஆர்வத்தில் கவனிக்க மறந்தேன் என்பது . ஆசிரியரின் ஞாபகசக்தி கண்டு அனைத்து நண்பர்களும் சற்றே அரண்டு விட்டனர் . 

             *அதுநாள் வரை லயன் வலை தளத்தில் வெறும் பெயர்களாக மட்டுமே தெரிந்து வந்து நண்பர்களும் ,, பெயராக கூட தெரியாத நண்பர்களும் என பலரையும் நேரிலே பார்த்து பேச முடிந்தது . அனைவரும் ஆசிரியர் உடன் துவக்க நிமிட தயக்கங்கள் உதறி சகஜமாக பேச ஆரம்பித்தனர். கேள்விகள் , வினாக்கள் , வினவல்கள் , .......என சரமாறித் தாக்குதல் தொடுக்க அத்துனை பேருக்குமே சிரித்தும் , சில சமயம் மளுப்பியும், யோசித்தும் என ஆசிரியரும் சளைக்காமல் பதில் தொடுத்தார் .தலீவர் ஒரு லாங் சைஸ் நோட்ல இருந்து பல கோரிக்கைகளை போட்டுத்தாக்கினார். 

            *தனது ஒரு வயது குட்டி பாப்பா ,துணைவியார் உடன் நண்பர் பழனிவேல் , வீட்டம்மாவோடு நண்பர் சல்லூம் , பள்ளி செல்லும் செல்ல மகள் ,மனைவி சகிதம் ஈரோட்டுக்கு மிக அருகே இருக்கும் பள்ளிபாளையம் புனித சாத்தான் ஜி...மற்றும் அறிமுகம் இல்லாத சில நண்பர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கொண்டாட்டத்தில் தங்களையும் இணைத்து கொண்டனர் . எத்தனை தோட்டாக்கள் டெக்ஸ் சுடுவாறோ அத்துனை போட்டோக்கள் எடுக்கப்பட்டன. இரத்தபடலம் மற்றும் மின்னும் மரணம் முழு தொகுப்பு கேட்காத நண்பர்கள் யாரும் இல்லை அன்று .....

*திடும் என ஒரு நண்பர் சற்றே லார்கோவை விட உயரமாக ஆஜரனார். என்னை பார்த்த உடன் நீங்களா ? என ஒரு பார்வை பார்த்தார், நானும் தம்பி அதுநீதானா?என்ற எதிர் பார்வை வீசினேன். கிரிக்கட் ஆடுகளத்தில் பல வருடங்களாக கடுமையான மோதல்களில் ஈடுபட்டு வந்த இரு எதிர் அணி வீரர்கள் தம்பி யுவாவும் நானும் தான் அது . காமிக்ஸ்ன் ,அதுவும் டெக்ஸின் தீவிர ரசிகர்கள் இருவரும் என்பது அப்போது எங்கள் இருவருக்குமே தெரியாதது சிறிய இழப்பே. இப்போது எங்கள் சேலம் அணியின் தூணாகவும் ,உயிர் நண்பர்களில் ஒருவராகவும் உள்ளார்.        
                
 *ப்ளாக்கில் அந்த சமயத்தில் கடுமையான வாதங்களில் ஈடுபட்டு வந்த ஈரோடு விஜய்யும் பெங்களூரு கார்த்திக் சோமலிங்காவும் நேரிலே அந்த விழாவில் சந்தித்த போது..........(கீழே போட்டோ போடுகிறேன் அதில் உள்ள அவர்களின் உணர்ச்சிகளே சொல்லும் ,அதை விவரிக்க வார்த்தைகளும் வேண்டுமோ??). மதுரை நண்பர் கார்த்திகை பாண்டியன் ,நண்பர் கோகுல், மூத்த வாசக நண்பர் பாரதி நந்தீஸ்வரன், ஓவியர் &நண்பர் அஜய்சாமி,இன்னும் சில நண்பர்கள் காலை முதலே எல்லா கொண்டாட்டத்தின் போதும் உற்சாகத்தோடு ஆசிரியரோடும் நண்பர்களுடனும் பேசி மகிழ்ந்தனர்.                        

*அருகே இருந்த ஆக்ஸ்போர்டு ஓட்டல் ஏசி ஹாலில் மதிய உணவுக்கு ஈரோடு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் அருகே ஸ்டாலின் ,,எதிரே நான் ஒரே டேபிளில் சாப்பிட்டது மறக்க இயலா நிறைவான நீங்கா நினைவு . வெஜிடபிள் பிரியாணி மட்டுமே சாப்பிட்டார் ஆசிரியர். அருகருகே அனைத்து நண்பர்கள் கலகலப்பான உரையாடல்கள் உடன் சாப்பிட்டோம். சாப்பாட்டின் இடையே திருப்பூர் நண்பர் பிரபாகர் (எ) சிபிஜி இணைந்து கொண்டார் . ஐஸ்கிரீம் கடையில் லெமன் சோடா குடித்த போது ஆசிரியரிடம் வண்ணத்தில் டெக்ஸ் வர வாய்ப்புண்டாங் சார் என கேட்டுவைத்தேன்.9மாதங்களில் அந்த வேண்டுகோளை நிறைவேற்றி என்னை மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் திக்கு முக்காட வைத்து விட்டார் ஆசிரியர். வண்ண டெக்ஸ்க்கு துவக்க புள்ளி வைத்த அந்த லெமன் சோடாவை என்றுமே மறக்க இயலுமோ ????...........
    
 *4மணிக்கு நண்பர் கர்ணன் ,திருப்பூர் நண்பர் சிவசரவணகுமார் மற்றும் பல நண்பர்கள் சேர்ந்து கொண்டனர்.  ஸ்டீல் கிளா மட்டும் கடைசி வரை வரவேயில்லை. இப்போது நண்பர்கள் ,மின்னும் மரணம் முழுவண்ண தொகுப்புக்காக ஆசிரியரை ,டெக்ஸின் பிடிவாதத்துடன் நெருக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் மிடுக்குடன் மறுத்து வந்த அவரின் குரல் சற்றே தேய தொடங்கியதுடன் நண்பர்கள் "பீல்டிங்கை"சற்றே இன்னும் டைட் செய்தனர். வந்ததே அந்த ஆனந்த அறிவிப்பு ,"2015ஜனவரியில் மின்னும் மரணம் இறுதி பாகத்துடன் சேர்ந்து வரும் ".......நண்பர்களின் உற்சாக ஆரவாரமும் கைதட்டல்களும் காதை பிளந்தன. அக்கம் பக்கம் அனைத்து ஸ்டால் காரர்களின் பொறாமை பார்வையும் நம் ஸ்டால் மீது விழ ஆரம்பித்தது. மின்னும் மரணம் வெளிவர அஸ்திவாரம் போட்ட அந்த 15நண்பர்களில் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில் காலரைத் தூக்கி விட்டு சற்றே பெருமிதம் கொள்கிறேன்.

            * அந்த உற்சாகத்துடன் ,மாலை சேர்ந்து கொண்ட நண்பர்களுன் கும்மாளம் என அந்த நாள் இனிய நாளாக என்றும் என் மனதில் நிலைத்திருக்கும் நண்பர்களே...........இத்தனை சம்பவங்களை நினைவு கூர்ந்து எழுதுவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல , ஏதும் சுவையான சம்பவங்களை நான் விட்டிருந்தால் நண்பர்கள் இங்கே குறிப்பிடவும். பெயர்கள் விட்டுப்போன நண்பர்களிடம் ஒரு சின்ன சாரியை தெரிவித்து கொள்கிறேன்.அடுத்த வாரம் 2014LMS நாளை நினைவு கூர்கிறேன். இதை எழுத சொல்லியும்  உற்சாகமும் படுத்திய சேந்தம்பட்டி நண்பர்களுக்கு மிகப்பெரிய நன்றி.
என்றும் மாறா நட்புடன் .......
*சேலம் Tex விஜயராகவன் &கிட் ஆர்டின் கண்ணன்.




*நண்பர்கள் யுவா,நான் ,சல்லூம் ,பிரபாகர் &கார்த்திக் சோமலிங்கா ஆசிரியருடன்...

*நண்பர் கார்த்திகை பாண்டியன் ,சாத்தான் ஜி.....

*கேள்வி கணைகளுடன் ஆசிரியரை தாக்கும் தலீவர் ......

*ஈரோடு விஜய் , ஸ்டாலின் ஜி, சேலம் கர்ணன் ,சாத்தான் ஜி, ஆசிரியர் ,திருப்பூர் சிவசரவணகுமார்,&நான்....

நண்பர் பழனிவேல்..தான் துணைவியாருடன்

புனிதசாத்தான்,ஓவியர் சாரதி & எடிட்டர்

எடிட்டருடன் யுவா கண்ணன்.

சில மைண்டுவாய்ஸ் கலாட்டாக்கள்


41 comments:

  1. வணக்கம் நண்பரே ..... படித்து விட்டு வருகிறேன் :)

    ReplyDelete
  2. அருமை நண்பரே .... அந்த நாளை மீண்டு(ம்) கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் ... வெடிக்கட்டும் டெக்ஸ் தோட்டாக்கள் மீண்டும் மீண்டும் ....

    ReplyDelete
  3. அருமை நண்பர்களே ....இத்தனை வருடங்கள் கழிந்தும் கொஞ்சம் கூட நினைவு பிசகாமல் பதிவு செய்தது நட்பின் வலிமை என்றே நினைக்கிறேன் ....


    வாழ்த்துக்கள் ....இந்த ஆண்டும் இரண்டு நாள் கொண்டாட்டங்கள் இன்னும் அமர்க்களம் படும் என்ற நினைவில் இருக்கும் பொழுது தேதி மாற்றத்தால் கொண்டாட்டம் குறைகிறதே என்ற ஏக்கமும் இப்போது மனதில் எழுதுவதை தவிர்க்க முடிய வில்லை ...:(

    ReplyDelete
  4. உங்கள் எழுத்து நடை அருமை நண்பர்களே ..அதற்கு பல பூங்கொத்து வாழ்த்துக்கள் ....அடிக்கடி தொடருங்கள் ..:)

    ReplyDelete
    Replies
    1. ஒன்றும் குறைந்து விடாது தல ...கவலை வேணாமே ..வழக்கம் போல உபசரித்து மகிழ்த்த அந்த நால்வர் அணி இருக்கு....பட்டையை கிளப்பி விடலாம் ...

      Delete
  5. அட்டகாசம் போங்கள் ! சிரிப்பு வெடிகளுடன் சரளமான சம்பவ கோர்ப்பு ....!!!!!

    (இட்லி ,மசால் தோசை சாப்பிட்டதை கூட மறக்கலியே :) ......

    மைன்ட் வாய்ஸ் ....ஹா ..ஹா ...சிரிச்சு முடில !!

    சூப்பர் !!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி செல்வம் சார் .....சாப்பிட்டது என்றுமே எனக்கு மறக்காது சார் ....என்ன அன்று ஆசிரியர் முன்னாடி அன்லிமிட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டிவிட்டேன்....ஏதும் நினைத்து இருப்பாரோ ?...

      Delete
    2. கண்டிப்பா நினைச்சிருப்பாரு....

      இவருக்கு மட்டும் டபுள் டோக்கன் வாங்கியிருக்கணும் என்று

      Delete
  6. கனவல்ல நிஜம்- ஈரோடு புத்தகத்திருவிழா 9வது நாள் ( 11-8-2013) என இத்தாலி விஜய் சர்வாதிகாரி ப்ளாக்கில் எழுதியவைகள் தான் ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு 2014-ல் என்னை அழைத்துவந்தது..! இந்த காமிக்ஸ் உலகின் படைப்புகள் தெரிந்த அளவிற்கு...அதில் பிண்ணி பினைந்துள்ள நண்பர்கள் உலகம் பற்றி ஒரு சதவிகிதம் கூட எனக்கு தெரியவே தெரியாது..! என்னை உற்சாகத்துடன் அழைத்து வந்த...அந்த பதிவின் தொடராக, உங்களின் மற்றொரு பார்வை, மனதிற்குள் உற்சாகத்தை...நேற்று நடந்தது போலவே தாலாட்டுகிறது..! நினைவுகள் பகிர்ந்தமைக்கு நன்றிகள்...சேலம் இரவுகழுகாரே..!

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போலவே இந்த பதிவையும் வலையேற்றம் செய்தமைக்கு முதலில் நன்றிகள் மாயாவி சார் .....நண்பர்கள் சந்திப்பு என்றவுடன் வயது பாதியாக குறைந்து விடுகிறது சார் ...அதற்காகவே இது போன்ற நாட்களுக்கு மனம் ஏங்க ஆரம்பித்து விடுகிறது சார் ....

      Delete
  7. டைரியில் எழுதி வைத்து இருந்தீரா? டெக்ஸ்?. நல்ல உணர்வு பூர்வமாக அனுபவித்து எழுதிய உங்களை பார்த்து பொறாமை படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் இளா !மனம் என்னும் டைரியில் எழுதி விட்டேன் .....என்றும் அழியாது...

      Delete
  8. அருமை நண்பர்களே.. முக்கியமான தருணங்களை இழந்து விட்டதான ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.. இழந்ததைப் பெறமுடியாது... ஆனால் இனி வரும் காலங்களில் முடிந்த அளவு அனைத்து விழாக்களிலும் கலந்து கொண்டு கலக்குவோம்...

    ReplyDelete
    Replies
    1. சரவணன் ஜி.!
      டெபனட்லீ ! டெபனட்லீ !

      (புரொஃபைல் போட்டோவுல இருக்குற புள்ள துப்பாக்கி இல்லாம இருந்திருக்கலாம். சொள்ளு விட பயமாருக்கு .!)

      Delete
  9. டெக்ஸ் ஜி.......அட்டகாசம் அருமை...உங்களுடைய எழுத்துநடை என்னை 2012 புத்தக திருவிழாவுக்கே இழுத்து சென்று விட்டது...மிகவும் அருமையாக உள்ளது ஜி...அடுத்த பதிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளேன் ராகவன் ஜி....

    ReplyDelete
  10. டெக்ஸ் ஜி.......அட்டகாசம் அருமை...உங்களுடைய எழுத்துநடை என்னை 2012 புத்தக திருவிழாவுக்கே இழுத்து சென்று விட்டது...மிகவும் அருமையாக உள்ளது ஜி...அடுத்த பதிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளேன் ராகவன் ஜி....

    ReplyDelete
  11. டெக்ஸ் ஜி.......அட்டகாசம் அருமை...உங்களுடைய எழுத்துநடை என்னை 2012 புத்தக திருவிழாவுக்கே இழுத்து சென்று விட்டது...மிகவும் அருமையாக உள்ளது ஜி...அடுத்த பதிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளேன் ராகவன் ஜி....

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவு அடியேன் கைவண்ணத்தில் யுவா.!
      ஆதரவு தாருங்கள்.!

      Delete
  12. மாம்ஸ்

    சூப்பரு

    அசத்தல் பதிவு

    ஹ்ம்ம்ம்ம்ம் உள்ளத்திலிருந்து மீட்டு எடுத்திருக்கிறீர்கள் அருமை

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

    இந்தப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது
    நன்றி மாம்ஸ் ​_ /\_
    .

    ReplyDelete
    Replies
    1. சிபிஜி.!

      அந்த மாதிரியே ஓடிவந்து., மூச்சிறைக்க பாடுவிங்களோ.,,?

      Delete
    2. சிபிஜி.!

      அந்த மாதிரியே ஓடிவந்து., மூச்சிறைக்க பாடுவிங்களோ.,,?

      Delete
  13. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தவைகளை இவ்வளவு ஞாபகம் வைத்து எழுதுவது என்னைப் பொருத்தவரை ஒரு அசாத்தியமான விசயமே! உங்கள் நினைவாற்றலுக்கும் நினைவுகூறலுக்கும் முறையே வாழ்த்து மற்றும் நன்றி!
    இதை ஞாபகம் வைத்திருப்பதெல்லாம் சரிதான்... உங்க கல்யாண நாளை மறந்துந்துட்டு வாங்கிக் கட்டிக்காதீங்க :)

    ReplyDelete
    Replies
    1. //இதை ஞாபகம் வைத்திருப்பதெல்லாம் சரிதான்... உங்க கல்யாண நாளை மறந்துந்துட்டு வாங்கிக் கட்டிக்காதீங்க :)//

      ஈ வி.!
      அதெல்லாம்., உங்களைப் போல் அனுபவசாலிகளின் கதைகளை கேட்டு நாங்க தெளிவா நடந்துக்குவோம்.! :-)

      Delete
  14. மிகவும் சிறந்த மீள் நினைவு .முதல் முறை நான் உங்கள் அனைவரையும் சந்தித்து மகிந்த நாள் .என்னை பலருக்கும் நினைவு இல்லை எனினும் உங்கள் அனைவருடைய உற்சாகம் என் நினைவாக உள்ளன .நன்றி டெக்ஸ்

    ReplyDelete
    Replies
    1. அதே உற்சாகத்துடன் இந்த வருடமும் தொடருவோம் பீனிக்ஸ்.!

      Delete
  15. வாழ்த்துகள் டெக்ஸ் விஜய் மற்றும் கண்ணன். மாயாவி புண்ணியத்துல URL கிடைச்சுது. இல்லேன்னா நீங்க இந்த புது BLOG ஆரம்பிச்சதுதெரியாம போய் இருக்கும்... இன்னும் படிக்கல. படிச்சுட்டு வரேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் MP sir,
      இந்த பதிவு முழுக்க டெக்ஸ் விஜயின் உழைப்பு மட்டுமே.! உங்களோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன்.!

      Delete
    2. கண்ணன்
      உங்களுக்கு வாழ்த்து சொன்னது கார்சனின் கடந்த காலம் விமர்சனத்துக்கும் இனிமேல் நீங்கள் எழுதப் போகும் பல பதிவுகளுக்கும். sir ஐ கட் பண்ணுங்க. ரொம்ப வயசான மாதிரி பீலிங் வருது... நாங்களே காமிக்சை காயயகல்பமா உபயோகிச்சு வயசை குறைச்சுட்டு இருக்கோம் :) அப்புறம் டெக்ஸ் விஜய் கிட்ட கட்டுபாடில்லா சுதந்திரம் வாங்கி நிறைய, நல்லா எழுதுங்க...வெறும் புத்தக விமர்சனத்தோட நிறுத்திடாதீங்க...

      டெக்ஸ் விஜய்-சூப்பர். நல்லா எழுதிருக்கீங்க. நேரில் வராத வர முடியாத எங்களுக்கு நேர்ல பார்த்த மாதிரி இருக்கு. 2016 ல கட்டாயம் வர வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறது. தேர்ந்த உரைநடை, சரளமாக , யதார்த்த பாணியில் வருகிறது. இந்த பாணியை இப்படியே பிடித்துக் கொள்ளுங்கள்.

      இந்த மாதிரி உரைநடை கட்டுரை/பதிவுகளுக்கு என சில விதிகள் இருக்கும். அதை கூகிள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ பெற்று ஒரு தடவை படித்துப் பாருங்களேன். உதவியாக இருக்கும்.

      Delete
  16. டைரியில் எழுதி வைத்து இருந்தீரா? டெக்ஸ்?. நல்ல உணர்வு பூர்வமாக அனுபவித்து எழுதிய உங்களை பார்த்து பொறாமை படுகிறேன்.

    ReplyDelete
  17. மாயாவி சார் .!லிங்க் கொடுத்தற்கு நன்றி சார்!
    டெக்ஸ் வில்லரின் முரட்டு பக்தர் டெக்ஸ் விஜய ராகவன் அவர்களுக்கு இவ்வளவு எழத்து திறமையா? அருமையான தெளிவான டெக்ஸ் வில்லர் கதைபோல விறுவிறுப்பான எழத்து நடை சூப்பர்.!

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் MV சார் ....முரட்டு பக்தர்,, ஆனால் சாஃப்ட் மேன் (கண் சிமிட்டும் படங்கள் ஐந்து )

      Delete
  18. அருமையான பதிவு...

    ReplyDelete
  19. 2013 ஐ மிஸ் பண்ணி விட்டேனே....:(

    ReplyDelete