Monday, August 3, 2015

ஒரு பட்டிக்காட்டானின் முதல் மிட்டாய்கடை அனுபவம் (ஈரோடு 2014)

வணக்கம் நண்பர்களே.!

            *இந்த பதிவில் நண்பர்களின் பெயர்களை குறிப்பிடாமல் விட்டதற்கு காரணம்.,  ஒருவர் பெயரை மறந்துவிட்டாலும் சங்கடம் ஏற்படுமே என்பதுதான்.
            *ஆகஸ்டு 2, 2014. அன்று சனிக்கிழமை.  நள்ளிரவு ஆறு மணிக்கே எழுந்து., தயாராகி (குளிச்ச ஞாபகம் இருக்கு) , ஒருவித படபடப்புடன் பேருந்திலேறி ஈரோட்டிற்கு கிளம்பினேன். மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்ச்சி பொறிந்தது. (பொங்கியதுன்னு சொன்னா., மத்தாப்பு பொங்குமான்னு அறிவியல் பூர்வமா கேள்வி கேப்பிங்களே.?)
            *அதுநாள் வரையிலும் ப்ளாக்கிலும்., தொலைபேசியிலும் சந்தித்திருந்த நண்பர்கள் பலரையும்., எடிட்டரையும் நேரில் பார்த்து பேசப்போகிறோம் என்ற குதூகலத்தில் மனம் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது.
பஸ்ஸில் என்னைப்போலவே., கோழி திருடிய தினுசில் உட்கார்ந்து இருந்த சிலரை பார்த்து., ஒருவேளை இவங்களும் நம்மள மாதிரி புக்ஃபேருக்குத்தான் வராங்களோ , ப்ளாக்குல பழகின நண்பர்கள் யாராச்சும் இருப்பாங்களா?  , என்று ஏதேதோ எண்ணங்களுடன் ஈரோட்டை அடைந்தேன்.!
           *அதற்குள்ளாகவே., சில நண்பர்கள் அங்கே குழுமியிருந்தனர். அவர்களுடன் ஐக்கியமான ஐந்தாவது நிமிடத்தில் ஜூ.எடிட்டருடன் நமது எடிட்டரும் நுழைவாயிலுக்கு வந்துவிடவே , கோயிலில் பொங்கல் கொடுப்பவரை சுற்றி வளைப்பது போல் அவரை சுற்றி ஒரு வளையத்தை உருவிக்கிவிட்டோம்.!  Gift parcel போல L M S காப்பி ஒன்றை கையோடு கொண்டு வந்திருந்தார். (எடிட்டர் பாஷையில் சொல்லவேண்டுமெனில் , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு டப்பா போல)
            *நண்பர் ஒருவருக்கு போன் செய்தபோது, வந்து கொண்டிருக்கிறேன். நீங்க சாப்பிட்டாச்சான்னு கேட்டார். அப்போதுதான் டிபன் செய்யலை எனும் சொரணையே வந்தது. பக்கத்திலேயே மிலிட்டரி ஹோட்டல் தெரிந்தது. ஆனால் சனிக்கிழமை சைவம் மட்டுமே என்பதில் நான் ரொம்ப ஸ்டிரிட்டு. (வூட்டுக்காரம்மா சொல்லி எல்லாம் இல்லீங்க.! நானே சுயமா எடுத்த முடிவு. நம்புங்க.)
ஒருவழியா சைவ ஹோட்டல் ஒன்று கண்ணில் படவே பூரியும் பாதி வேகாத உருளைக் கிழங்குடன் கூடிய மசாலையும் உள்ளே தள்ளிவிட்டு புக்ஃபேர் நுழைவாயிலை அடைந்தேன்.
              *எல்லோரும் வணக்கம் சொல்லவே., நானும் என் பங்கு வணக்கத்தை எடிட்டரிடம் தெரிவித்தேன். அவரோ., சத்தம் வருது ஆனா ஆளு இருக்குற மாதிரி தெரியலயே , என்ற தினுசில்  தேடிவிட்டு திரும்பிகொண்டார்.  நம்ம கலரு அப்படி, கண்ணு கூசியிருக்கும்.  சரி!  உள்ளே  ட்யூப்லைட் வெளிச்சத்துல மறுபடி வணக்கம் சொல்லிக்குவோம் என்று சமாதானமடைந்தேன்.
              *11 மணிக்குத்தான் உள்ளே விடுவார்களே., என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தபோது., என்னைப் போலவே முதல்முறை வந்த ஒரு நண்பர் நிறைய போஸ்டர்கள் வைத்திருந்தார்.
நம்மதான் காத்துலயே படம் வரையுற ஆளுகளாச்சே., காகிதம் கிடைச்சா விட்டுடுவோமா என்ன?
ஆளுக்கொரு போஸ்டரை கையில் வாங்கி கொண்டு ஸ்டால் டெக்கரேட் பண்ணப் போறோம் என்று. பந்தாவாக கேட்டில் சொல்லிவிட்டு., இன்ட்ரொடக்ஷன் சீன்ல ஹீரோ நடக்குற மாதிரி கெத்தா உள்ளே நுழைஞ்சிட்டோம்.! கொண்டு போன போஸ்டரை எல்லாம் , ஸ்டாலில் கேப்பே இல்லாமல் ஒட்டி முடித்தனர் நண்பர்கள்.!
              *நான்கைந்து பேர் மட்டுமே அப்போது இருந்தோம். நண்பர் ஒருவர் என்னை இன்னொரு நண்பருக்கு அறிமுகப்படுத்தினார். இதை கேட்டுக் கொண்டிருந்த எடிட்டர்  , ஓ... நீங்கதானா அது?  என்று கேட்டபடி கைகொடுத்தார். (அண்ணாந்து பார்த்தேன். மேலே நிறைய லைட்டெல்லாம் போட்டு வெளிச்சம் அதிகமாகவே இருந்தது).
               *நான் சிறுவயதிலிருந்து சுவாசித்து சிலாகிக்கும்., காமிக்ஸ் உலகின் கதாநாயகருடன் கைகுலுக்கிறேன் என்று பெருமிதமாக இருந்தது. பதினோரு மணி ஆவதற்குள்., நிறைய நண்பர்கள் கூடிவிடவே , இதற்கு மேலும் தாமதித்தால்.,  நண்பர்களே L M S ஐ பிரித்து (பிச்சி)  வெளியிட்டு விடுவார்கள்., என்று பயந்து., எடிட்டர் மைசூர் பாகு டப்பாவை திறந்து இதழை வெளியிட்டார். முதல் பிரதியை "இவர் " வெளியிட "அவர் " பெற்றுக்கொண்டார். (நாந்தான் பேரு சொல்லமாட்டேன்னு முதல்லயே சொல்லிட்டேனே.?)
              *அந்த கணத்தில் அங்கே ஏகப்பட்ட P.C.ஸ்ரீராம்களும்., கே.வி. ஆனந்துகளும் உருவானார்கள். ப்ளாஷ் ப்ளாஷ் னு போட்டோக்கள். வீடியோக்கள். செல்போன் படப்பிடிப்புகள் என அரங்கமே அதிர்ந்தது. நடுநடுவே விஜய் டிவி ஆங்கர்களை போல ஊஊஊ என்றும் ஹேய்ய்ய் என்றும் நண்பர்கள் சப்தமிட்டனர்.
             *அந்நேரத்தில்.,
என்னை கடந்து சென்ற இருவர் பேசிக்கொண்டு சென்றது . என்னான்னா.,
            *"ஏ .  , என்னப்பா இது., இவ்வளவு ஆர்ப்பாட்டம்.?"
யாராச்சும் நடிகைய வெச்சு புக்கு ரிலீஸ் பண்றாங்களோ என்னமோ?
அட இல்லப்பா., இது காமிக்ஸ் ஸ்டாலு. இவிங்க எங்க நடிகைய கூப்பிடப் போறாங்க.!
(இந்த நேரத்தில் நண்பர் ஒருவர் ஊகூ என்று கூச்சலிடவே)
             *"ஏ , டான்ஸ் ஆடுவாங்க போல இருக்கேப்பா.?
யாரு ஆடுறது.?  அதோ., அவருதான் நடுவால நிக்குறாரு. அவர்தான் ஆடுவாருன்னு நினைக்கிறேன்.
யாரு? கையில் புக்கை வெச்சிகிட்டு போட்டோவுக்கு போஸ் குடுக்குறாரே அவரா.?? 
           ------இதற்குமேல் இந்த சம்பாஷனையில் காது கொடுக்க விரும்பாமல் நண்பர்களை கவனித்தேன்.
               *ஆளாளுக்கு பல கோணங்களில் போட்டோ எடுத்துத் தள்ளி கொண்டிருந்ததை பார்த்ததும்., எனக்குள் இருந்த கலையார்வம் மெல்ல எட்டிப் பார்த்தது. காமிரா மாமேதை கர்ணனின் பல படங்களை பார்த்து இருப்பதால்.,  ஓரளவுக்கு நாலெட்ஜ் இருப்பதாக நம்பி நாமும் கொஞ்சம் திறமையை காட்டுவோமே என்று
செல்போனை கையில் எடுத்துக்கொண்டு., ஆங்கிள் பார்த்தேன். 
             *ஸ்டாலும் நண்பர்களும் முழுதாக கவர் ஆகவில்லை. எனவே ஒவ்வொரு அடியாக பின்னோக்கி நகர்ந்து கொண்டே போய்.,  கால் இடறி ஏதோ ஒரு  ஸ்டாலில் பில்போட அமர்ந்திருந்த இருவரின் மடியில் உட்கார்ந்துவிட்டேன். கொடல் புடுங்கி கோவிந்தனிடம் சிக்கிய ஸ்டைல் பாண்டி நிலையில் பரிதாபமாக அவர்களை பார்த்தேன். அவர்களோ ,  பரவால்ல தம்பி., எந்திரிங்க.!  கவனமா இருக்கக்கூடாதா என்றனர். நான் ஸாரிங்க என்று சொல்லவும்., அதெல்லாம் வேணாம் தம்பி., அடுத்த தடவை மடியில உக்கார வந்திங்கன்னு வைங்க  என்றபடி ஒரு கோணி ஊசியை நிறுத்தி வைத்து காட்டினர்.
              *நான் மெதுவாக நமது கூட்டத்தில் கலந்து நின்று கொண்டு., அஹ்கா சூப்பரு  என்று வைகைப் புயலைப்போல் கைதட்டிக் கொண்டு மெதுவாக திரும்பி பார்த்தேன். அவர்கள் கோணி ஊசியை தூக்கி காண்பிக்கவும் , ஸ்டாலுக்கு உள்ளே போய் பாதுகாப்பாக நின்று கொண்டேன்.!
தொடர்ந்த ஒவ்வொரு நிமிடமும் நண்பர்களின் வருகை., தேன்கூட்டை அடையும் தேனீக்களைப்போல் கூடிக்கொண்டே போனது.
              *L MS ஐ கையில் வாங்கிய எல்லோர் முகத்திலும் LED வெளிச்சத்தை ஏராளமாய் பார்த்திட முடிந்தது. அங்கேயே சில நண்பர்கள் விவாதங்களையும் ஆரம்பித்து விட்டனர். அட்டையில் டைகருக்கு ஒரு கண்ணை காணோமே என்றும் இல்லைங்க ஒரிஜினல் போட்டோவே அப்படித்தான்., என்றும்  கலாட்டாக்கள் சூடுபிடித்தன.
               *கிங் ஷ்பெசல் விளம்பரத்தை., டைகர் கதை என ஒருவரும் புதிய அறிமுகம் என ஒருவரும் சொல்ல., அது ஸ்பைடர் கதை என்று ஸ்பைடர் ரசிகர்  சொல்லவும் சிரிப்பொலி எழுந்தது. (நல்லவேளையாக  மாடஸ்டி கதை என்று யாரும் சொல்லவில்லை.) அது டெக்ஸ் கதைங்க என்று ஒரு தீர்க்கதரிசி மிகச்சரியாக தீர்ப்பளித்து பஞ்சாயத்தை கலைத்தார்.
                *அடுத்து கையெழுத்து வாங்கும் படலம் ஆரம்பமானது. விரல் வலிக்க வலிக்க சலிக்காமல் எடிட்டரும் ஜூ.எடிட்டரும் கையெழுத்திட்டு கொண்டே இருந்தனர்.நானும் என் பங்கிற்கு எடிட்டரின் விரல்களுக்கு வேலை கொடுத்தேன். (கையெழுத்து வாங்குனேன்றதை கலைநயத்தோட சொல்றேனாக்கும்.) அப்படியே ஸ்டாலை ஒட்டியிருந்த நடைபாதையில் ஒதுங்கி அரட்டை கச்சேரியை ஆரம்பித்தோம்.
              *எடிட்டரிடம் நான் கேட்க நினைத்திருந்த ஒவ்வொன்றையும் ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டே சென்றனர். எனக்கும் ஏதாவது கேட்க வேண்டுமே என்கிற ஆதங்கம் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆனாலும் நான் வாய்திறக்கும் முன்னரே என் மனதில் இருந்த கேள்விகள்  மற்றவர்களால் கேட்கப்பட்டு விட்டது .
              *இந்த நேரத்தில் நண்பர் ஒருவர் எடிட்டர் அவர்களின் சிறுவயது பேட்டிகள் , போட்டோஸ் என ஒரு ஆல்பத்தையே தயாரித்து எடுத்து வந்து எடிட்டரிடம் காட்டினார். அதே நண்பரே சிங்கத்தின் சிறுவயதில் முழுத்தொகுப்பாக வெளியிடுங்கள் சார் என ஒரு கோரிக்கையும் வைத்தார்.
அடடே நாமும் இப்படி ஏதாவது வித்தியாசமாக கேட்கலாமே என்று தோன்றியது.
             *என்ன கேட்கலாம்., சி.சி.வயதில் கேட்டாச்சு. "வருகிறது " விளம்பரங்களை தொகுப்பாக கேட்கலாமா?  ச்சேச்சே அதுதான் வருட தொடக்கத்தில் கேட்லாக் கொடுத்துவிடுகிறார்களே.! அது வேண்டாம்.  ஆங்!  அதுதான் சரி., ஹாட்லைனை தொகுப்பாய் கேட்டு விடுவோம் என்று நினைத்து மெதுவாக., சார்!  அந்த ஹா...ஹாட் லைனை என்று ஆரம்பித்ததும்., எடிட்டர் ,என்னாது?  என்று  ஆர்வமாக திரும்பினார் . ஹா…ஆ…ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ் வரும் வாய்ப்பிருக்கா சார் என்று உளறி வைத்தேன். இப்போதைக்கு வாய்ப்பில்லை தம்பு என்று உடனே பல்பு கொடுக்கப்பட்டேன்.
              *அந்த ஸ்பைடர் ரசிகர்., கலரில் ஸ்பைடர் கதைகளை கேட்க., எடிட்டருக்கே சிரிப்பு. (என்னைப் பற்றி கேட்கவா வேண்டும் . சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டேன். ஏற்கனவே  மாடஸ்டி கலரில் வேண்டுமென ப்ளாக்கில் கேட்டு இருந்தார்கள். ஆனாலும்  எளவரிசியைப் பற்றி யாரும் அங்கே  கேட்கவில்லை  )கலரில்
இரத்தப்படலம்., இரத்த கோட்டை என்று ஒரே கவிச்சையாக பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரிய்வில்லை.
             *லஞ்ச் டைம் நெருங்கி விட்டதென வயிறு வாய்ஸ் மெஸேஜ் கொடுக்கவும் மெல்ல கலைந்து ஹோட்டலில் தஞ்சமடைந்தோம்.
லஞ்ச் முடிந்து எடிட்டர் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க சென்றுவிடவே ,
நானும் ,  நண்பர்கள் இருவரும் மற்ற ஸ்டால்களை நோட்டம் விட சென்றோம். (ஹிஹிஹி உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. ஆமாமா., எல்லாத்தையும் நோட்டம் விடத்தான் சென்றோம்) .
               *கூட வந்த நண்பர்களில் ஒருவர்.,  ஏகப்பட்ட ஸ்டால்களில்  தேடி , எட்டு புள்ளி கோல புஸ்தகமும் .. , செட்டிநாட்டு சமையல் குறிப்பும் வாங்கினார். நெளி கோலமெல்லாம் போடமாட்டிங்களா பாசு என்று கேட்டேன்.  வொய்ஃப்புக்கு பாஸ் என்று சிரித்தார். அட., இதிலென்னங்க கூச்சம்., எனக்கே உபயோகப்படும்னு சொல்லி நானும் ஒரு செட் வாங்கிக் கொண்டேன்.
              *மீண்டும் நாங்கள்  நமது ஸ்டாலுக்கு திரும்பியபோது எடிட்டர் வந்ததிருந்தார். மேலும் கச்சேரி தொடர்ந்தது. ஹைலைட்டாக   கலர் டெக்ஸ் கலெக்ஷன் ஒன்று வெளியிட எடிட்டர் ஒப்புதல் அளித்தார். (போன மாதம் வெளியான லயன் 250) .
விளக்கு வைக்கும் நேரம் நெருங்கவும் வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்று சில நண்பர்கள் விடைபெறவும்., நானும் அனைவரிடமும் விடைபெற்று திரும்பினேன்.
             *போன வருசம் வீட்டம்மா கிட்ட  பர்மிசன் வாங்குறதுல அப்பரசெண்டியா இருந்ததால ஒருநாள் மட்டும்தான் கெடைச்சது. ஆனா இப்போ பர்மிசன் வாங்குற படிப்புல பட்டம் மட்டுமல்ல பி ஹெச் டி யே வாங்கிட்டமுல்ல. அதனால இந்த வருசம் ஈரோட்டுக்கு ரெண்டு நாள் புரோக்கிராமு பிக்ஸ் பண்ணியாச்சு. பட்டறைய போடுறோம் பட்டைய கெளப்புறோம் ஆம்மா.!!!!
             *நான் கிளம்பிய பிறகு., நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய செய்தியையும் போட்டோக்களையும் பார்த்தேன். அந்த நண்பரை மனதார வாழ்த்திவிட்டு போட்டோக்களை பார்த்தபோதுதான் அந்த விசயம்  கண்ணில் பட்டது.
              *அடடா.! அவசரப்பட்டு கிளம்பி , இப்படி ஒரு நல்ல விசயத்தை மிஸ் பண்ணிட்டோமேன்னு ரொம்பவும் வருத்தப்பட்டேன். இன்னும் கொஞ்சம் பொருத்திருந்தால் அந்த நல்ல தருணத்தை நாமும் அனுபவித்திருக்கலாமே என்று மனம் அடித்துக்கொண்டது.  போட்டோவில் பார்க்க பார்க்க ஏக்கம் அதிகரித்தது. எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் அந்த விசயம்.  இப்போது அந்த போட்டோக்களை பார்க்க நேர்ந்தாலும் கடைவாயில் உமிழ்நீர் சுரக்கும்!!  ஆமாம்., அந்த கேக் அவ்வளவு அழகாக இருந்தது.!! 
ஹிஹி!  ஹிஹி!
*நன்றிகள் பல.
*நித்தமும் நேசமுடனும் நெஞ்சம் நிறைந்த நட்புடனும்.,
-------------உங்கள் அன்பு.,-------------
KiD ஆர்டின் KannaN
&
Tex விஜயராகவன்.


 இது 'அவர்' வெளியிட 'இவர்' வாங்கிட்டதுங்க...


 இவிங்க தாங்க..அந்த கோவில்ல பொங்கல் வாங்க வந்த மாதிரி..வளையம் போட்டவிங்க...

அவரோட...குடும்பம்தாங்க இவிங்க...

இவிங்கதாங்க...நானு பேருவெச்ச..சே.ப.குழுகாரங்க...

அதே கோஸ்ட்டி ஆள்மாத்திநிக்கறாங்க....

இது நான் சொன்ன அந்த கே.வி.ஆனந்த் எடுத்ததுங்க....

இது நான் சொன்ன இந்த PC .ஸ்ரீராம் எடுத்ததுங்க....

இடது பக்கம் இருக்கறவர் 'இவருங்க'...வலது பக்கம் 'அவர்'..இது அவரு..இது இவரு...


பாத்தாலே வாயில 'உமிழ்நீர்' ஊருதுனது இந்த கேக்கைதான்....

இந்த போட்டோவைத்தான் மறக்கவே முடியாது...அந்த கோணிஊசி கடை பின்னாடி தெரியுது பாருங்க..அதுதான்...

அது நடக்காதுடியேய்...ன்னு சவுண்டு உட்டது நானு இல்லிங்க...

 நடைபாதை அடைச்ச...அந்த அரட்ட கச்சேரி இதுதாங்க...

இந்த பாப்பா போட்டோ எதுக்கு போட்டேன்..?!?!

45 comments:

  1. இப்பதிவு வெளிவர உறுதுணையாய் இருந்து., கலக்கும் அருமை நண்பர் மாயாவி சிவா என்கிற கட்டப்பா விற்கு எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள்.
    _/\_ _/\_ _/\_

    ReplyDelete
    Replies
    1. @ கிட் ஆர்ட்டின் கண்ணன்

      ஐந்து தடவை பதிவை படிச்சுட்டேன்...ஆரம்பத்தில் வந்த..அதே சிரிப்பு ஒவ்வொரு முறையும், கொஞ்சமும் குறையாம வந்துட்டேதான் இருக்கு..! எப்போ சிரிப்பு அடங்குதோ... அத்தனை தடவை படிச்சிட்டு வர்றேன்..ஹாஹா...!

      Delete
    2. //ஐந்து தடவை பதிவை படிச்சுட்டேன்...//

      ஐந்து முறை படித்துமா புரியவில்லை கட்டப்பரே.! ! :-)

      Delete
    3. @ கிட் ஆர்ட்டின் கண்ணன்

      எத்தனை முறை படித்தேன் என கணக்கேயில்லை...ஆனால் அந்த சிரிப்பு மட்டும் அடங்கவேயில்லை..ஹாஹா...!

      Delete
  2. வணக்கம் நண்பர்களே.....நேற்று நடந்த மாதிரி தான் இருக்கு....LMS ரிலீஸ் ஆகி ஒரு வருடம் ஆகிட்டது.....அந்த நாளுக்கு நம்மை எல்லாம் கிட் மாமா அழைத்து செல்கிறார் .........அந்த பசுமை நிறைந்த நினைவுகளை பாடித்திரிவோம் மீண்டும் வாரீர் ...ஈரோடு புத்தக அரங்குக்கு...

    ReplyDelete
  3. ஹா....ஹா.....ஹா.....கிட் ஆர்டின் ஜி அருமை,சூப்பர்,அட்டகாசமான பதிவு....உங்களுடைய நகைச்சுவை கலந்த எழுத்துநடை அட்டகாசம்.....மிகவும் ரசித்து&சிரித்துக்கொண்டே (அனுபவித்தேன்) படித்தேன்.....

    ReplyDelete
  4. ஹா....ஹா.....ஹா.....கிட் ஆர்டின் ஜி அருமை,சூப்பர்,அட்டகாசமான பதிவு....உங்களுடைய நகைச்சுவை கலந்த எழுத்துநடை அட்டகாசம்.....மிகவும் ரசித்து&சிரித்துக்கொண்டே (அனுபவித்தேன்) படித்தேன்.....

    ReplyDelete
    Replies
    1. யுவா.! எல்லாம் உங்க ட்ரெயினிங்குதானே.!

      Delete
  5. இந்த பதிவில் நண்பர்களின் பெயர்களை குறிப்பிடாமல் விட்டதற்கு காரணம்., ஒருவர் பெயரை மறந்துவிட்டாலும் சங்கடம் ஏற்படுமே என்பதுதான். //

    சூப்பரு
    முன்னெச்சரிக்கை முத்தண்ணா ;-)

    ReplyDelete
  6. நள்ளிரவு ஆறு மணிக்கே எழுந்து., தயாராகி (குளிச்ச ஞாபகம் இருக்கு) , ஒருவித படபடப்புடன் பேருந்திலேறி ஈரோட்டிற்கு கிளம்பினேன். மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்ச்சி பொறிந்தது. //

    அப்ப 12 மணிய என்னாம்பீங்க

    அவரே
    ( நீங்கதான் பேரெல்லாம் சொல்லப்படாதுண்ணுட்டீங்களே :)) )

    ஹா ஹா ஹா

    சிரிப்ப கண்டுரோல் பண்ண முடியல

    அந்த.கோணி ஊசி மேட்டரு சூப்பரு :))
    சிரிச்சி வயிறெல்லாம் வலிக்குது

    கலக்குறீங்க தவில் காரரே _/\_
    .

    ReplyDelete
    Replies
    1. //அந்த.கோணி ஊசி மேட்டரு சூப்பரு :))
      சிரிச்சி வயிறெல்லாம் வலிக்குது //

      சிபிஜி., எனக்கு நினைச்சாலே வயிறெல்லாம் கலக்குது.!

      Delete
  7. * 'அட! நம்ம விஜயராகவனுக்கு இம்புட்டு நகைச்சுவை உணர்வா!!'னு நினைச்சு ஆச்சர்யப்பட்டேன். அப்புறம்தான் இது தனித்தவிலோட வேலைனு தெரிஞ்சிச்சு...

    * 'அவரு, இவரு'னு போட்டதுனால ஆரம்பத்துல கொஞ்சம் டீடெய்லு மிஸ் ஆச்சு. அது கொஞ்சம் 'ஙே'னு இருந்திச்சி. ஆனா கடேசில போட்டாவுலயும் 'அவருதான் இவரு. இவருதான் அவரு'னு பார்த்தப்போ கொல்லுனு சிரிச்சுப்புட்டேன்!

    அடிக்கடி எழுதுங்க!

    கட்டப்பாவின் காமிக்ஸ் புகழ் ஓங்கட்டும்! ஜெய் மகிழ்மதீஈஈஈ...

    ReplyDelete
    Replies
    1. ஈ . வி.,
      கிங் ஷ்பெசலை டெக்ஸ் கதைதான் என்று அன்றே சொன்ன தீர்க்கதரிசி யாரென்று நினைவிருக்கிறதா.???

      Delete
  8. இந்த பதிவை படித்து விட்டு தனியாக சிரித்து வீட்டம்மா கிட்ட டோஸ் வாங்கி இந்த பக்கம் காத்துல பறக்க விட்டு , மறக்கமுடியாத அந்த நாளை கண் முன்னர் கொண்டு வந்த அவருக்கும் .அதை அழகாக பதிவிட்ட இவருக்கும் நன்றி .மீண்டும் அது போன்ற ஒரு நாலை நாளை உருவாக்குவோம்

    ReplyDelete
    Replies
    1. நாளை நாலை என சொதப்பி விட்டது ஹி ஹி ஹி

      Delete
    2. கிட் ஆர்டின் உண்மையில் சூப்பர் பதிவு .

      Delete
    3. ஆகா சூப்பர்.!அப்படியே இந்த வருடமும் எழதுங்கள் சார்.!

      Delete
    4. //நாளை நாலை என சொதப்பி விட்டது ஹி ஹி //

      விடுங்க பீனிக்ஸ்! ஜகஜந்தானே.!



      //ஆகா சூப்பர்.!அப்படியே இந்த வருடமும் எழதுங்கள் சார்.!//


      செஞ்சிடலாம் மாடஸ்டியாரே.!
      (அந்த ஸாரை கட் பண்ணுங்கோளேன்.)

      Delete

  9. ஜீப்பரு ஜீப்பரு
    தனி தவில் வித்வானே

    அவரு இவரு நல்லாத்தாம்லே போஸ்ட் போட்டிருக்கீரு :)

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டுக்கு வருவோம்வே.! அங்கன வெச்சி , டீட்டெய்லா சொல்லும்.!

      Delete
  10. என் முதுகு குலுங்குவதை பார்த்து "ஏங்க மொபைல பாத்து அழுறீங்க" என கேட்டாள் என் இல்லாள்.

    ReplyDelete
    Replies
    1. அடடே! எதுக்காக அழுதிங்க ஷல்லூம் :):):)

      Delete
  11. டெக்ஸ் எழுத்து நடையில் பின்னுறீங்க...... சீக்கிரமா உங்ககிட்ட இருந்து ஒரு கதை எதிர்பார்ககலாம்.......

    ReplyDelete
    Replies
    1. ஸ்டாலின் ஜி...நகைச்சுவை நடையில் வாசித்தது கிட் மாமா ....எனக்கு நகைச்சுவை சற்றே தூரம் ..ஹி...ஹி...

      Delete
    2. மக்கள் ஜி! ஜுப்பரு.! :-)

      Delete
    3. மக்கள் ஜி! ஜுப்பரு.! :-)

      Delete
  12. ரவிகண்ணன் :):):):):):):):):):):):)

    ReplyDelete
  13. Excellent post Ravi. Enjoyed very much.

    ReplyDelete
    Replies
    1. Welcome.J K.
      நண்பா உன்னுடைய முதல் கமெண்டை நம்ம ப்ளாக்கில் பதிந்ததற்கு வாழ்த்துகள்!

      வலை உலகிற்கு நல்வரவு நண்பா.!!!

      Delete
    2. வெல்கம் ஜெய்.....உங்களை இருவரும் வருக வருக என வரவேற்குறோம் ....நீங்கள் டைகர் ரசிகாரா ....வாழ்த்துக்கள் ....இனிமேல் அடிக்கடி வாருங்கள் .....

      Delete
  14. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதடா சாமி..

    ReplyDelete
    Replies
    1. உங்க வயிற்று வலிதான் டைப் செய்த என் விரல் வலிக்கு மருந்து MV சார்.!

      Delete
    2. ஓ…… ஸாரி M P சார். (M V ன்னு டைப்பிட்டேன்.)

      Delete
  15. என்ன ஒரு கிண்டல். நய்யான்டி கிட்டு தூள்மா. தூள்

    ReplyDelete
    Replies
    1. உங்களை விடவா ஸ்பைடர்.??

      ஆனாலும் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.!! :)

      Delete
  16. பூரிக்கு தொட்டுகிட்ட உருளைக்கிழங்கு பாதி வேக்காட்டில் இருந்தது ஞாபகம் இருக்கு ....

    ஆனா அவரு அவருதான் ;இவுரு இவருதான் அப்டிங்கறது மட்டும் ஞாபகத்தில் வரமாட்டேங்குது ....;-)


    கோணி ஊசி படித்தவுடன் "வடிவேலு தேங்காய் கடை "யும் சேர்ந்து ஞாபகத்தில் வர சிரிச்சு மாளல !!!!!!!

    என்ன ஒரு ஹாஸ்ய நடை !!!!!

    அட்டகாசம் !!!!!

    (நீங்கள் ஹாஸ்ய நாடகம் எழுத ட்ரை பண்ணுங்க ! எஸ் வி சேகர் ,க்ரேசி மோகன் இப்படித்தான் ஆரம்பிச்சாங்க )............!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. உஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா.!!!
      உங்ககிட்ட ஒரு கமெண்ட் வாங்கறத்துக்குள்ள நாக்கு தள்ளிடுது.!!!
      கத்தி துப்பாக்கி எல்லாம் காட்டி பயமுறுத்த வேண்டியிருக்கு.!!! :-)

      அய்யோ.! கிரேஷி., எஸ் வி.சேகர் எல்லாம் ரொம்ப பெரியவங்க.!! (இது தெரிஞ்சா வருத்தப்படுவாங்களே.)

      எஸ். வி. எப்போதும் கதை மட்டும்தான் எழுதுவார். வசனம் பெரும்பாலும் வெங்கட் என்ற ஒருவரும் வேறு சிலரும் எழுதுவார்கள்.! !

      Delete
  17. Replies
    1. நல்லதொரு நிகழ்வுக்கு,அசாத்தியமானதொரு திரைக்கதை எழுதி உள்ளீர்கள் நண்பரே.இந்த நிகழ்வில் நானும் ஓர் மறைமுக பாத்திரம் என்ற எண்ணம் அந்த நாளின் நினைவை என்னுள் கிளறச்செய்கிறது. ஹாஸ்ய உணர்வை கொண்டு வருவதில் வெற்றி கண்டுள்ளீர்கள்.பழைய நல்ல நினைவுகளை மீட்டெடுப்பது ஒரு சுவராஸ்யமான,இனிமையான விசயம்.அருமை நண்பரே அருமை.எனது இதயம்கனிந்த வாழ்த்துக்களும்,நன்றியும் உங்களுக்கே உரித்தாகட்டும்.

      Delete
  18. நன்றி நண்பர் அறிவரசு ரவி அவர்களே.!

    ReplyDelete
  19. மிக அருமை ராகவன் . ....வாழ்த்துக்கள்

    ReplyDelete